தனியார் துறையை ஊக்குவிக்கும் 2018 பட்ஜெட்!

ஒக்டோபர் 12, 2017

“2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தனியார் துறையை ஊக்குவிப்பதாகவே அமையும்” என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வொஷிங்டனில், உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனர் மெங்கிஸ்டு அலெமாயெஹுவுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“2018க்கான வரவு-செலவுத் திட்டம் மூலம் நாட்டில் புதிய பொருளாதாரப் பாய்ச்சல்கள் உண்டாகும். குறிப்பாக, புத்தாக்கத்துடனான தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தனியார் துறை மீது ஒருமித்த கவனம் செலுத்தப்படும். இதன்மூலம், புதிய பொருளாதாரக் கட்டமைப்புகள் உருவாகும்” என்று அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்டம் தொடர்பான தனது கன்னியுரையை அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் நவம்பர் ஒன்பதாம் திகதி ஆற்றவுள்ளார்.

செய்திகள்
வெள்ளி February 23, 2018

9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வெள்ளி February 23, 2018

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு சிறிலங்காவை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.