தன்னுயிர் ஈந்த தியாக தீபம் திலீபன்!

Friday September 21, 2018

 ஈழத்­த­மி­ழி­னத்­தின் இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தில் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்­கம் 26ஆம் திக­தி­வ­ரை­யான நாள்­கள் முக்­கி­யத்­து­வம் மிக்­கவை. விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­தின் மூத்த போராளி திலீ­ப­னால் சாத்­வீக வழி­யில் சாகும்­வரை உண்ணா நோன்பு முன்­னெ­டுக்­கப்­பட்டு 12ஆவது நாள் தமிழ் இனத்­துக்­காக அவர் உயிர்த்­தி­யா­கம் செய்த அந்தத் தியாக வர­லாற்­றுக்­கு­ரிய மகோன்­னத நாள்­க­ளா­கும்.

ஆயு­தப்­போ­ராட்­டத்­தைக் கையி­லெ­டுத்த விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மாவீ­ரர்­களை பதி­வில் வைத்­தி­ருந்­தா­லும், சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்து தமிழ் இனத்­துக்­காக உயிர்­நீத்த வர­லாறு என்­பது இரா­சையா பார்த்­தீ­பன் என்ற திலீ­ப­னையே சாரும்.

 1987ஆம் ஆண்டு செப்­டெம்­பர் மாதம் 15ஆம் திகதி, அதாவது, இற்­றைக்கு 31ஆண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னர், தாம் முன்­வைக்­கும் ஐந்து அம்ச அர­சி­யல் கோரிக்­கை­களை நிறை­வேற்­றி­வைக்க இந்­திய அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கும் வகை­யில் நல்­லூர் வடக்கு வீதி­யில் சாகும்­வரை உண்ணா நோன்பு இருப்­ப­தற்­கான முன்­ன­றி­விப்பை இந்­திய அர­சுக்கு வௌிப்­ப­டுத்­தி­விட்டு தியா­கத் தீபம் திலீ­பன் என்ற போராளி காலை வேளை­யில் மேடை­யின் இருக்­கை­யில் அம­ரு­கின்­றான்.

ஆயு­தப்­போ­ரா­ளி­யாகி, பொறுப்­பா­ன­தொரு அர­சி­யற் போரா­ளி­யாகி, இறு­தி­யில் பாரத நாட்­டுக்கு விடு­தலை பெற்­றுக்­கொ­டுத்த மகாத்மா காந்­தி­யின் அகிம்சை வழி­யைப் பின்­பற்றி தமிழ் மக்­க­ளின் நியா­ய­மான ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து தனது உறு­தி­மிக்க போராட்­டத்தை தொடங்­கு­கின்­றான்.

 தமிழ்க் கட­வு­ளாம் கந்­தப் பெரு­மான் குடி­கொண்­டி­ ருக்­கின்ற நல்­லூர் ஆல­யத்­தின் வடக்கு வீதி­யில் திலீ­பன் புன்­ன­கைத்த முகத்­து­டன் இனத்­துக்­கான வெற்றி பெரு­மி­தத்­து­டன் காந்­தீய தேசத்­துக்­கும், அர­சுக்­கும் சவால் விடுத்து உன்­னத இலட்­சி­யப் பய­ணத்தை ஆரம்­பித்து தான் முன்­வைத்த ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறு வேண்­டு­கி­றான்.

 1.மீளக் குடி­ய­மர்­தல் என்ற பெய­ரில் வட­க்கு–கி­ழக்­கில் புதி­தா­கத் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­ப­டும் குடி­யேற்­றங்­க­ளைத் தடுத்து நிறுத்த வேண்­டும். 

 2.சிறைக் கூடங்­க­ளி­லும் இரா­ணுவ, பொலிஸ் தடுப்பு முகாம்­க­ளி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யற் கைதி­கள் அனை­வ­ரும் விடு­தலை செய்­யப்­பட வேண்­டும். 

3.அவ­சர காலச்­சட்­டம் முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்­டும். 

 4.ஊர்­கா­வல் படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஆயு­தங்­கள் முற்­றா­கக் களை­யப்­ப­டல் வேண்­டும். 

 5.வடக்கு கிழக்கு பிர­தே­சங்­க­ளில் புதி­தாக பொலிஸ் நிலை­யங்­க­ளைத் திறப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் முற்­றாக நிறுத்­தப்­பட வேண்­டும்.</strong> என்­ப­னவே திலீ­பன் முன்­வைத்த அந்த ஐந்து அம்­சக் கோரிக்­கை­க­ளா­கும்.
 
 அந்­தக் கோரிக்­கை­கள் யாவற்­றை­யும் அகிம்சை வழி­யில் போராடிப் பெற இய­லும் என்ற நம்­பிக்­கையை திலீ­பன் வைத்­தி­ருந்த போதி­லும், இந்­திய அர­சை­யும் நம்­பத் தயா­ரற்ற நிலை­யில் அவ­னது மன­மி­ருந்­தது. தமிழ் மக்­க­ளின் உன்­னத இலட்­சி­யத்தை அடை­வ­தற்கு தியாகி திலீ­பன் அகிம்சை வழி­யில் போரா­டி­ய­போது காந்­தி­யத் தத்­து­வத்தை மூச்­சுக்கு முந்­நூறு தடவை உச்­ச­ரிக்­கின்ற பாரத தேசம், அகிம்­சைப் போராட்­டத்தை அறவே கண்டு கொள்­ள­வே­யில்லை; மதிப்­ப­ளிக்­க­வும் இல்லை.

திலீ­ப­னது அறப்­போ­ராட்­டத்­துக்கு ஆத­ர­வும்   உற்­சா­க­மும் வழங்­கிய தமிழ் மக்­கள்

அதே­வேளை தமிழ் மக்­க­ள் ஒன்­று­தி­ரண்டு தியாகி திலீ­ப­னின் அந்த அறப்­போ­ராட்­டத்­திற்கு தின­மும் உர­மூட்­டிக்­கொண்­டி­ருந்­த­னர். நல்­லூர்க் கந்­த­சு­வாமி கோயில் வடக்கு வீதியை நோக்கி நான்கு திசை­க­ளி­லி­ருந்­தும் சிறு­வர்­கள், மாண­வர்­கள் தொடக்­கம் முதி­ய­வர்­கள் வரை பக­லி­ரவு என்று பாரா­மல் குறித்த உண்ணா நோன்பு இடம்­பெற்ற இடத்­தில் கூடி­யி­ருந்­த­னர்.

அவர்­கள் மட்­டு­மன்றி போரா­ளி­கள், தள­ப­தி­கள், பொறுப்­பா­ளர்­கள் என திலீ­ப­னின் போராட்­டத்­துக்கு ஆத­ரவு நல்­கும் விதத்­தில் இயக்க உறுப்­பி­னர்­க­ளும் இணைந்­தி­ருந்­த­னர். திலீ­ப­னின் அந்த உண்ணா நோன்­புப் போராட்­டத்தை எப்­ப­டி­யா­வது கைவி­டச் செய்து முறி­ய­டித்­து­விட வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் அப்­போ­தி­ருந்த இந்­தி­யத் தூது­வ­ரான ஜே.என்.டிக்­ஸிற் மற்­றும் இந்­திய ‘றோ ’ அமைப்­பின் உய­ர­தி­கா­ரி­கள், அமை­திப்­ப­டை­யின் உய­ர­தி­கா­ரி­கள் முழு­மு­யற்­சி­யி­லும் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

 இரவு நேரத்­தில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வ­ரான வே.பிர­பா­க­ரன் மேடை­யில் உண்­ணா­நோன்பை முன்­னெ­ டுத்­தி­ருந்த தியாகி திலீ­ப­னோடு அரு­கி­லி­ருந்து உரை­யா­டு­வார். ஒரு வாரத்தை எட்­டிய நிலை­யிலும் இந்­திய அர­சா­னது திலீ­ப­னின் போராட்­டத்­தை­யும், ஐந்து அம்­சக் கோரிக்­கை­க­ளை­யும் உதா­சீ­னம் செய்­து­வந்­தது. இந்­தி­யா­வின் அந்­தச் செய­லா­னது தமிழ் மக்­க­ளுக்கு எரிச்­ச­லை­யேற்­ப­டுத்­தி­ய­து­டன் அவர்­க­ளைச் சினம் கொள்­ள­வும் வைத்­தது.

 உண்­ணா­நோன்பு  மேடை­யில் இருந்­த­வாறே   தமிழ்­மக்­க­ளுக்கு   வேண்­டு­கோள் விடுத்த திலீ­பன்

‘‘நான் வாழ்­நாள் முழு­வ­தும் நேசித்த என் அன்­புக்­கு­ரிய மக்­களே!  புரட்­சிக்­குத் தயா­ரா­கி­விட்­டீர்­களா? நான் மீட்க முடி­யாத இடத்­துக்­குச் சென்று கொண்­டி­ருக்­கின்­றேன். நீங்­கள் பெருந்­த­லை­வ­னின் பின்­னால் போரா­டத் தயா­ரா­குங்­கள். எனக்கு விடை தாருங்­கள். வானத்­தில் இருந்து எனது இனத்­தின் விடு­த­லையை நான் பார்ப்­பேன். நான் சாகும்­போது மகிழ்ச்­சி­யு­டன் சாகின்­றேன். மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்’’. என்று அவ­னது ஆத்­மா­வின் குரல் தமி­ழி­னத்­தின் உரி­மைக் குர­லாக வௌிப்­பட்­டது.

நல்­லூர் வீதி­யில் கூடி­யி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் திலீ­ப­னது உரை­கேட்­டுக் கண்­ணீர் வடித்­த­னர். காந்­தி­தே­சம் எனப் புக­ழப்­ப­டு­கின்ற இந்­தியா, திலீ­ப­னது போராட்­டம் தவ­றா­னது எனத் தப்­புக்­க­ணக்குப் போட்­டது. இந்­தி­யா­வின் தேசத் தந்­தை­யான மகாத்மா காந்­தி­யின் உண்ணா நோன்­புப் போராட்­டம் எந்த வகை­யில் குறைந்­தது என எண்­ணிய இந்­தியா , மகாத்மா காந்தி நீர் அருந்­தித்­தானே நோன்­பி­ருந்­தார். திலீ­பன் நீர்­கூட அருந்­தாது நோன்­பி­ருப்­பது காந்­திய வழியா? எனக்­கூறி அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­து­டன் ஏள­ன­மும் செய்­தது.

 திலீ­பன் உண்ணா நோன்பை உறு­தி­யா­கக் கடைப்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது, இந்­தி­யத் தூது­வ­ரான ஜே.என்.டிக்­சிற் அவ்­வி­டத்­துக்­குச் சென்று நிலை­மையை அவதா னித்துவிட்டுச் சென்­றார். அவ­ரி­ட­மி­ருந்து எந்­தத்­த­க­வ­லும் வெளி­வ­ர­வில்லை. இந்­திய தேச­மா­னது திலீ­ப­னது உண்ணா நோன்­புப் போராட்­டத்­தின் இறுதி நாள்­கள் நெருங்­கிக் கொண்­டி­ருக்­கின்ற வேளை­யில், திலீ­ப­னின் அறப்­போ­ராட்­டத்­தைக் கண்­டு­கொள்­ளாது இரக்­கமே இல்­லாது திலீ­பன் சாவடையும் நாள்­களை எண்­ணிக் கொண்­டி­ருந்­தது.

 உல­கத்­துக்கே அகிம்­சை­யைப் போதித்­த­தா­கப் பறை­சாற்­றும் இந்­தி­யா­வைப் பின்­பற்றி, அதே அகிம்­சையை ஆயு­த­மாக வைத்து தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­ னை­க­ளைத் தீர்க்­க­மு­டி­ யும் என விடு­த­லைப்­பு­லி­ கள் நம்­பி­னர். அந்த நம்­பிக்­கை­யு­டன் தான் தமி­ழர்­க­ளு­டைய அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு, விடு­த­லைப் புலி­க­ளின் தலை­மை­யின் கட்­ட­ளைக்­க­மை­வாக, செயல்­வ­டி­வம் கொடுப்­ப­தற்கு, அகிம்­சைப் போரா­ளி­யாக திலீ­பன் முன்­வந்­த­மை­யா­னது தமிழ் மக்­க­ளின் விடி­ வுக்­கான போராட்­டத்­தில் தனக்­கும் ஒரு­முக்­கிய பங்கு இருக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­தி­யது.

தனது வாழ்­வையே தமிழ் இனத்­தின் விடி­வுக்­காய்  அர்ப்­ப­ணித்த தியாகி திலீ­பன்

அகிம்­சை­யின் உன்­னத வடி­வ­மா­கத் திக­ழு­கின்ற தியாக தீபம் திலீ­ப­னின் சொந்த ஊர் ஊரெ­ழு­வா­கும். சிறு­வ­ய­தில் தாயா­ரை­யி­ழந்து, சிறு­ப­ரா­யத்­தி­ லி­ருந்து தந்­தை­யின் அர­வ­ணைப்­பில் வளர்ந்­தான். 1963ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27ஆம் திகதி பிறந்த இரா­சையா பார்த்­தீ­பன், ஆரம்­பக்­கல்­வியை தமது கிரா­மப்­புற பாட­சா­லை­யில் கற்று, பின்­னர் உயர்தரக் கல்வி கற்­ப­தற்­காக யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் இணைந்து கொண்­டான்.

கல்­வி­யில் திறமை கொண்ட மாண­வ­னான திலீ­பன் மருத்­து­வ­பீ­டத்­திற்கு தெரி­வா­கிய நிலை­யில், அந்த அரிய வாய்ப்­பைத் தூக்­கி­யெ­றிந்­து­விட்டு விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­தில் இணைந்து கொண்­டான். படிக்­கின்­ற­போதே அர­சி­யல் நட­வ­டிக்­கை­யி­லீ­டு­பட்­டி­ருந்த திலீ­பன், இயக்­கத்­தில் சேர்ந்து கொண்­ட­தும் அர­சி­யல் தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்­போ­தைய யாழ் மாவட்­டத் தள­ப­தி­யான கிட்­டு­வால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தான்.

 திலீ­ப­னின் பேச்­சும், செய­லும் விடு­த­லைக்கு உர­மூட்­டின. துடிப்­பான இளை­ஞ­னாக, போரா­ளி­யாக வலம் வந்­தான். யாழ் மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­கி­யி­ருந்த போரா­ளி­யான திலீ­பன், வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் நடை­பெற்ற இலங்கை இரா­ணு­வத்­து­ட­னான நேரடி மோத­லில் பலத்த காயத்­துக்­குள்­ளாகி வயிற்­றுப் பகு­தி­யி­லுள்ள குடல் சிதைந்­தி­ருந்­தது. சத்­தி­ர­சி­கிச்­சைக்­குப்­பின்­னர் வைத்­தி­யர்­க­ளின் அறி­வு­ரைக்­கி­ணங்க நடக்­கும்­படி ஆலோ­சனை கூறப்­பட்­டி­ருந்­தது. அத­னை­யும் மீறி தனது அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளி­லீ­டு­பட்டு வந்­தான்.

தியா­கம் என்­றால் திலீ­பன், திலீ­பன் என்­றால் தியா­கம் என்று கூறு­கின்ற அள­வுக்கு அவன் மேற்­கொண்ட போராட்­ட­மா­னது, அதி உச்­சத்­தைத் தொட்டு நின்­றது. 12நாள்­க­ளாக உண்ணா நோன்­பி­ருந்து தியா­கத் தீயில் ஆகு­தி­யான திலீ­ப­னின் நாமத்தை இன்­றும் ஒவ்­வொரு தமிழ் மக­னும் உச்­ச­ரிக்­கின்­ற­போது எமது உடம்­பி­லுள்ள நரம்­பு­கள் சிலிர்த்து நிற்­கும்

1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யன்று முற்­ப­கல் 10.48 மணி­ய­ள­வில், தான் உறு­தி­யா­கப் பின்­பற்­றிய கொள்­கை­களை காற்­றிலே பறக்­க­வி­டா­மல், மண்­ணிலே புதை­ய­வி­டா­மல், கண்­ணீ­ரில் கரை­ய­வி­டா­மல் தமிழ் மக்­க­ளி­டம் கொடுத்­து­விட்டு நல்­லூ­ரான் வீதி­யில் இவ்­வு­லக வாழ்க்­கை­யி­லி­ருந்து தியாகி திலீ­பன் விடை­பெற்­றுக் கொண்­டான்.

திலீ­ப­னின் தியா­கத்தை நினை­வு­கூ­ரும் வகை­யில் திலீ­பன் உண்ணா நோன்பை ஆரம்­பித்த செப்­ரெம்­பர் மாதம் 15ஆம் திகதி தொடக்­கம் திலீ­பன் உயிர்த் தியா­கம் செய்த நாள்­வரை திலீ­ப­னது தமிழ்­மக்­க­ளுக்­கான தியா­கத்தை தமி­ழர் தாய­கம் உட்­பட புலம் பெயர்ந்து வாழு­கின்ற தமி­ழர்­க­ளும் ஒன்று சேர்ந்து நினைவு கூர்­கி­றார்­கள்.

திலீ­பன் வகுத்­தது பாதையா சின்ன வய­தில் இது தேவையா?  என்ற உணர்ச்­சிக் கவி­ஞன் ஆனந்­த­னின் வரி­கள் காதில் ரீங்­கா­ர­ மிட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இன­வி­டு­த­லைக்­காக ஆயு­தம் ஏந்­தி­ய­வன்; அகிம்சை வழி­யில் தனக்கு நிகர் தானே என்­பதை தமி­ழு­ல­கத்­திற்­கும் இந்­தி­யா­வுக்­கும் பறை­சாற்றி உயி­ரா­யு­தம் ஏந்­தி­ய­வன்; அந்­தப் பார்த்­தீ­பன் இன்­றும் தீராத பசி­யோடு இருக்­கின்­றான். உறு­தி­யின் உறை­வி­டம் தியாக தீபம் திலீ­பனை ஒரு கண­மா­வது நினை­வில் இருத்தி மன­தார நினைவு கூர­வேண்­டி­ய வர­லாற்றுக் கடமை எமது தமிழ்மக்களுக்கு உண்டு.