தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது!

June 13, 2018

கடந்த 11ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார். 

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இதற்கு முன்னர் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அதன்போது இரண்டு வார காலப்பகுதியில் குறித்த கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக தபால் மா அதிபர் ரோஹண ஹெட்டியாரச்சி கூறினார். 

உடன்பாடு எட்டப்பட்டு இரண்டு வார காலம் முடியும் முன்னரே இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வது சரியானதல்ல என்று தபால் மா அதிபர் ரோஹண ஹெட்டியாரச்சி   கூறினார்.

செய்திகள்
வியாழன் June 21, 2018

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம் 11 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.