தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்!

June 14, 2018

தபால் சேவை ஊழியர்களின் பணி நிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. இந்நிலையில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தபால் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் கடந்த 11ம் திகதி தமது வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர். சுமார் 26000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது. 

வேலை நிறுத்தம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தபால் நிலையங்கள் பாழடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகள்
சனி June 23, 2018

சகல மாகாண சபைகளையும் கலைத்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான யோசனை ஒன்றைநாடாளுமன்றத்தில் முன்வைத்து தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய முறையிலோ அல்லது பழைய ம