தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயம்!

செவ்வாய் சனவரி 08, 2019

விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சட்டசபையில் குமரகுரு எம்.எல்.ஏ பேசும்போது, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது 2 ஆக பிரிக்கப்படுகிறது.கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.இதன் மூலம் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது.