தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்.

Tuesday December 04, 2018

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்ளுக்கு அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை அறிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன், கூறியது

குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்ளுக்கு அநேக இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
    
அதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ மழையும்,

சோழவரம், கும்மிடிப்பூண்டியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 32 செ.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 13% குறைவு.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.