தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி!

வியாழன் சனவரி 03, 2019

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேவை  தொடங்கப்படுகிறது. வருகிற 21-ந்திகதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை  ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது.

வருகிற 21-ந்திகதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை  ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த தொலைக்காட்சி சேவையில்  ஸ்டூடியோ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் 8-வது மாடியில் செயல்படும்.

தொலைக்காட்சி சேனல் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது நம்பரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமாக பயிற்சி, போட்டித்தேர்வு, கல்வி உதவித் தொகை தகவல் போன்றவைகள் பற்றிய நிகழ்ச்சிகள் நிபுணர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆசிரியர்கள் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.