தமிழக காவல்துறையினரின் தாக்குதலில் வைகோ காயம்!

ஞாயிறு ஓகஸ்ட் 02, 2015

தமிழகத்தில் மது விலக்கினை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்துவரும் வேளையில் வைக்கோவின் சொந்த ஊராக கலிங்கப்பட்டியில் மதுவிலக்கை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் வைகோ உள்ளிட்ட தொண்டர்கள் மீது காவல்துறையினா் தாக்குதல் நடத்தியதில் வைகோ உள்ளிட்டவா்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன..
நடைபெற்ற இந்த சம்பவத்தினை வைகோ தொண்டா் ஒருவா் முகநூலில் இவ்வாறு பதிவு செய்துள்ளாா்.

தமிழக மக்களே கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடும் போராட்டத்தில் வைகோ மீது ஐந்து குண்டுகள் வீசப்பட்டது அதில் ஒரு குண்டை தலைவரின் உதவியாளர் ஜெய பிரசாந்த் ஒரு குண்டை தட்டி விட்டிருக்கிறார் இல்லையென்றால் வைகோ மீது அந்த குண்டு வெடித்திருக்கும் 

அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடச்சொல்லி இருக்கிறார்.... பத்துமுறை துப்பாக்கி சூடு வைகோவை நோக்கி நடந்திருக்கிறது .
வைகோவை நோக்கி போலிஸ் கர்க்களை எடுத்து அடித்து இருக்கிறார்கள் இதில் வைகோவிற்கு காலில் காயம் ஏற்ப்பட்டு இருக்கிறது.........