தமிழக மீனவர்கள் 4 பேர் கைது!

ஞாயிறு ஜூலை 08, 2018

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக - இலங்கை எல்லையான கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் சிறிலங்கா  கடற்படையால் தாக்கப்பட்டு விரட்டியடிப்பதும், கைது செய்யப்பட்டு வருவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே ஒரு படகுடன் மீன்பிடித்து கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை சிறிலங்கா  கடற்படை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.