தமிழர்களின் தன்னாட்சியுரிமை மறுக்கப்படுவது ஆபத்தானது - பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர்

May 16, 2018

தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை மறுக்கப்படுவது ஆபத்தானது என்று பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் முதன்மை உரையாற்றும் பொழுதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர், எந்த அரசியல் தீர்வும் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் தமிழின அழிப்பை விசாரணை செய்வதற்கும், காணாமல் போகச் செய்யப்பட்டோர் விடயத்திலும் நீதி கிட்டும் வகையில் பன்னாட்டு நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்றும் தனது உரையில் ஜெரமி கோர்பின் மேலும் தெரிவித்தார்.

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....