தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள்!

Friday March 02, 2018

இலங்கையில் தமிழர்கள் மீதான பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் சித்திரவதைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக, அல்ஜஸிரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்களுடன் அல்ஜஸிரா தொலைக்காட்சி ஆதாரங்களை முன்வைத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டையுடைய அரசை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். சர்வாதிகாரமற்ற ஆட்சியை முன்னெடுப்பேன் என மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

எனினும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தற்போதும் தொடர்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் அல்ஜஸிராவுக்குக் கிடைத்துள்ளன. இலண்டனிலுள்ள அல்ஜஸிராவின் பிரத்தியேக நிருபர் பரனாபை பிலிப்ஸ் இந்த ஆதாரங்களைச் சேகரித்துள்ளார்

இதேபோன்ற ஆதாரங்களை ஏஎப்பி சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களிடம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களே இவையாகும் என அல்ஜசீரா ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.