தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் விசேட சந்திப்புக்களும், மாநாடும்

May 18, 2018

17.05.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் "இலங்கையில் இடம்பெறும் தமிழினவழிப்பும் தமிழர்களின் தேசிய வேணவாவும்" என்ற மாநாடு தமிழர் இயக்கம் மற்றும், தமிழர் ஒன்றியம் பெல்யியம் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டது.

28 நாடுகளின் 755 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் 103 பாராளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் வைத்துள்ள பசுமைக்கட்சியும் (Les Vers) மற்றும் இடதுசாரிக்கட்சியும் (GUE/NGL) இம்மாநாட்டிற்கான தமது நேரடி ஆதரவைத் தந்துதவினர்.

இம்மாநாட்டை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளான Mr.Jordi Solé மற்றும் Stefen Eck ஆகியோர் தலமையேற்று நடாத்தினர்.

இம் மாநாட்டிற்கு தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்து புத்தியீவிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்கள் விபரம்:

தமிழீழத்திலிருந்து முன்னால் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம்
லீலதேவி ஆனந்தநடறாய - முல்லை மாவட்ட காணாமற் போனோர்கள் அமைப்பின் செயலாளர்
தமிழகத்திலிருந்து மனித உரிமைகள் பேராசிரியர் போல் நியுமன் மற்றும் சட்டவாளர் திருமுருகன் காந்தி
பிரித்தானியாவிலிருந்து பன்னாட்டுத் உறவுகளுக்கான நிபுணர் கலாநிதி இராசரத்தினம் மதுரிகா

இம்மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இரசரீகச் சந்திப்புக்கள் 15.05.2018, 16.05.2018 மற்றும் இன்று 17.05.2018 அன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்றது. இச்சந்திப்புக்களில் பெல்யிய நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு, GSP + வெளிவிவகாரக் குழு, வலதுசாரிக் கட்சிகளின் தலமைக்குழுக்கள், அரோப்பிய பாராளுமன்றத்தின் இத்தாலிய மற்றும் பிரித்தாணிய பிரதிநிதிகள் என பலதரப்பட்ட உயர்மட்டக் குழுக்களை சந்தித்து தமிழினம் எதிர் நோக்கும் தமிழினவழிப்பையும், அனைத்துலக சமூகத்தால் தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி சார்ந்தும் அதன் விளைவால் தொடரும் கட்டமைப்புசார் தமிழினவழிப்பு பற்றியும் தமிழீழ மக்களுக்கு இருக்கும் சுய நிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக இன்று நடாத்தப்பட்ட "இலங்கையில் இடம்பெறும் தமிழினவழிப்பும் தமிழர்களின் தேசிய வேணவாவும்" என்ற மாநாடு தமிழினவழிப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அதைத்தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு கலந்துகொண்ட அனைவராளும் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற மாநாடு இரு பிருவுகளாக நடாத்தப்பட்டது. மதியம் 12.00 மணி தொடக்கம் 14.00 மணி வரை ஒரு மாநாடும் 15.30 தொடக்கம் 17.30 வரை மற்றுமொரு மாநாடுமாக இடம்பெற்றது.

இம்மாநாட்டில் தமீழீழ மக்களின் வரலாறு, அவர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கான வரலாற்று மற்றும் மரபு சார் உரிமைகள், ஆயுத  வழிப்போராட்டம் ஆரம்பமானதிற்கான அக மற்றும் புறச் சூழ்நிலைகள், தொடரும் கட்டமைப்பு சார் தமிழினவழிப்பு என அனைத்து விடையங்களும் புள்ளிவிபரங்களுடம் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக கட்டமைப்பு சார் தமிழினவழிப்பின் நிகழ்ச்சி நிரலில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் இன்றும் மேற்கொள்ளப்படும் “வலிந்து காணாமல் ஆக்கப்படுவோரின்” சார்பாக தாயகத்திலிருந்து கலந்துகொண்ட லீலதேவி ஆனந்தநடறாய (முல்லை மாவட்ட காணாமற் போனோர்கள் அமைப்பின் செயலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட நேரடிச் சாட்சியம்) அவர்கள் தரவுகளுடன் நடந்தவற்றை எடுத்துரைத்தார்.

மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்ட பாரளுமன்ற உறுப்பினர்களும், பிரத்தியேக சந்திப்புக்களில் கலந்துகொண்ட இராசதந்திரிகளும் தமிழினவழிப்பிற்கு எதிரான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் தேவைப்பாட்டையும் வலியுறித்தினர். ஐரோப்பாவிலிருக்கும் தமிழர்களுடன் தாம் நெருங்கிய உறவைப் பேன  விரும்புவதாகவும் அவர்களின் உரிமைக்கான சனனாயக வழிமுறைப் போராட்டங்களிற்கு தாம் என்றும் உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பெல்யியம் வாழ் தமிழர்களுடன் தமிழர் ஒன்றியம் பெல்யியம் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பும் நடாத்தப்பட்டது.
இம் மாநாட்டை தமிழர் ஒன்றியம் பெல்யியத்தின் துணையுடன் ஏற்பாடு செய்த தமிழர் இயக்கம் இதே போன்ற செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதற்கும், ஓர் மூலோபாய மற்றும் தூரநோக்கிலான தொடர் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதற்கு அனைத்துலக தமிழர்களிடமும் ஆதரவை வேண்டி நிற்கிறது.

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.