தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள்!

Wednesday February 28, 2018

முதலாம் நாள் 26.02.2018

ஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர்  26.02.2018 ஆரம்பமாகியது. அந்தவகையில் பங்குனி மாத கூட்டத்தொடர் நான்கு கிழமைகள் நடைபெறும் அதில் முதல் மூன்று நாட்களும் High Level Statements என்று சொல்லப்படும் உயர்நிலை அறிக்கைள் இடம்பெறும். அந்த வகையில் இன்று மனிதவுரிமைகள் சபையின் தலைவர், ஐ, நா பொதுச்செயலாளர், மனிதவுரிமைகள் சபையின் ஆணையாளர், சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரின் அறிக்கைகளைத் தொடர்ந்து நாடுகளும் தங்களது அறிக்கைகளை வாசித்திருந்தனர். மொத்தமாக 28 அறிக்கைகள் இன்றைய நாளில் வாசிக்கப்பட்டன.

வாசிக்கப்பட்ட அறிக்கைகளில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் சார்ந்து எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை. கூடுதலாக சிரியா,மியன்மார், புரூண்டி,பக்ரையன் போன்ற நாடுகளின் பிரச்சினைகளே அதிகம் பேசப்பட்ட்து.

இந்த உயர்நிலை அறிக்கையில் நாடுகள் தங்கள் நாட்டின் மனிதவுரிமைகள் நிலைசார்ந்தும் தங்களுடைய வெளிவிவகாரக் கொள்கை சார்ந்த மனிதவுரிமைகள் விடயம் சார்ந்தும் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் தமிழர் இயக்கம் உப அமைப்புகளுடன் சேர்ந்து இரண்டு வெளிவிவகார அமைச்சர்கள் உற்பட பல உயர் சந்திப்புக்களை மேற்கொண்டனர்.

இரண்டாம் நாள் 27.02.2018

வெனிசுவெலா நாட்டினால் “ கலாச்சார பன்முகத்தன்மையில் மனித உரிமை“ எனும் தமலப்பின் கீழ் நிகழ்த்தப்பட்ட பக்கவறை நிகழ்வு /27.02.2018 

வெனிசுவெலா நாட்டினால் “ கலாச்சார பன்முகத்தன்மையில் மனித உரிமை “ எனும் தலைப்பின் கீழ் நிகழ்த்தப்பட்ட பக்கவறை நிகழ்வில் தமிழர் இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இது ஓர் விசேடித்த தனிப்பட்ட நிகழ்வாகையால் நாடுகளின் பிரதிநிதிகள்  மாத்திரமே அழைக்கப் பட்டிருந்தனர். 

எனினும் வெனிசுவெலா நாட்டினால் தமிழர் இயக்கப் பிரதிநிதிகளிற்கு விடுக்கப்பட்ட பிரத்தியேக அழைப்பின் காரணமாக நாமும் அதில் கலந்துகொண்டிருந்தோம்.

 இந் நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், தமிழர் செயற்பாட்டாளர்களாக பல்வேறுபட்ட கலாச்சாரப் பின்னணியிலிருந்து  வருபவர்களுடனிணைந்து  செயற்படுபவர்களான எமக்கு அவர்களது கலாச்சாரப் பின்னணியைப் புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளித்து  நடக்க மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.  

நிகழ்வின் முடிவில் அந் நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் எமது விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது