தமிழர் உரிமைகளை மீட்க உலக நாடுகள் உதவ வேண்டும்!

செப்டம்பர் 26, 2017

ஈழ தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தர உலக நாடுகள் உதவ வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்தார். 

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், ‘இராணுவ இரும்பு பிடிக்குள் அவலப்படும் ஈழத்தமிழர்’ என்ற தலைப்பில் இயக்குநர் கௌதமன் நேற்று பேசியதாவது, 

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமையாளர்கள் கூறுகிறார்கள். 

ஐ.நா. விசாரணை அறிக்கையின்படியே, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.  2 இலட்சம் தமிழர்களை காணவில்லை. அவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள் என்றே நம்பப்படுகிறது. 

தமிழ் மண்ணை சிங்கள இராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறை, துணை இராணுவ படையினர் ஆகியோர் தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்துள்ளனர்.  அவர்களைப் பார்த்து குழந்தைகளும், பெண்களும் இளைஞர்களும் கலக்கத்திலும் பீதியிலும் உள்ளனர். இராணுவத்தின் பிடியில் இருந்து தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க தேவையான அனைத்து உதவிகளையும் சர்வதேச சமூகம் செய்ய வேண்டும். 

காலம் காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தர முன்வர வேண்டும் என, கௌதமன் பேசினார் .

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....