தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள். 27. 11. 2017

December 01, 2017

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம். மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட ; வெளியரங்கத் திடலிலே முன்னெடுத்த  தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்த ஆணடு;, கடந்த ஆண்டுகளைப் போன்று மிக அதிகஅளவில் மக்கள்  காலை நிகழ்வில் கலந் து  கொண்டு, மாவீரர்களுக்கு வீ ர வணக்கம் செலு்த்தினர். முதலாவது நிகழ்வு காலை 7.00 மணிக்கும்,. இரண்டாவது நிகழ்வு மதியம் 12.30 மணிக்கும் மூன் றாவது  நிகழ் வு மாலை 5.00 மணிக்கும் நடை பெற்றது. இன்று, நடைபெற்ற மூன்று நிகழ்விலும்   பெரு வாரியாகத் திரண்டிருந்த மக்களின் வருகை மாவீரர்களது மகத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தியது.

காலை நிகழ்வு, கனடா கொடியேற்றம , தேசியக் கொடியேற்றம் ; மணி ஒலி, அக வணக்கம், தேசியத்தலைவர் திரையில்  பிரதான சுடர் ஏற்றல், மாவீரர்களது ஈகைச் சுடர் ஏற் றல்,முதன்மைச் சுடர் ஏற ;றல், துயிலும் இல்லப் பாடல், மலர் வணக்கம் என்ற மாவீரர ; நாளுக்குரியதொடக்க வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.

மங்கல வாத்திய இசை இசைக்க, தொடர்ந ;து வானம் பாடிகள் தாயகப் பாடல்களை இசைத்தனர்.  மாவீரர்  வணக்க நடனம். தமிழ் மொழிக்கான நடனம். தலைவரைப் பற்றிய பாடலுக்கான நடனம்.  மாவீரரின் வீரத்தை வெளிப்படுத ;தம் நடனம். என்று மாணவர்கள் நடன  நிகழ்ச்சியினூடாக  மாவீரர் புகழ்   பாடி நின்றனர். இந்த ஆண்டு, பல மாணவர்கள் நடன  நிகழ்விலே, அரங்கிலே நின்று ஆடியமை எழுச்சியையும் உணர்வையும் தருவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இளம் மாணவர்கள் தாய் மொழி, தமிழீழம், மாவீரர்கள்; என்ற தலைப்பிலே உரையாற்றினர். மாணவர்களது பேச்சு அனைவராலும் பாராட் டப் பெற் றமை குறிப்பிடத் தக்கதாகும். இளையோர் அமைப்பினரின் உரை அகவத்தின் உரை என் ற உரைகளைத்  தொடர்ந் து சிலம்பம்  , இலக்கு என்ற நாடகம் ; என்பனவும ; இடம் பெற்ற ன. அரங்க
நிகழ்வாக நடைபெற்ற அனைத்து நிகழ் வுகளும் வந்திருந்தவர்கள் அவைவரையும் தாயகத்துக்கு அழைத்துச் சென்றன.

. முதலாவது நிகழ்வில், மிக நீண்ட வரிசையில ; நின்று, மக ;கள் மலர் வணக்கம் செய்து, ஈகைச்   சுடர் ஏந்தி மான மா வீ ரர்களை வழிட்டனர். இரண்டாவது நிகழ்வும் மண் டபம் நிறை ந்த மக் களோடு சிறப்பாக நடை பெற் றது. மூன்றாவது நிகழ்வுக் கு வருகை தந்திருந்த மக்கள்,  மிக நீண்ட நேரம் வீதியிலும், அரங்கிங்கு வெளிப் புறத்திலும். உள்ளரங்கத லும் காத்திருந்து  மாவீ ரர்களுக்கு வணக ;கம் செலுத்தினர், கார்த்திகை 27.11.2017 அன்று, மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்த மார்க்கம் பெயர் கிரவுண்ட் என்றுமில்லாதவாறு திணறி நின்றது.

தாயகக் கோட்பாட்டை நினைந ;து, ஒன்றிணைந்து வருகை தந்த ஈழத் தமிழர்களின் வருகையால்  மக்  கோவன் வீதி பெரும் வாகன நெருக்கடிக்குள்ளானது. தொண்டர்கள்  பலர்   மக்கள் அனைவரையும் மலர் வணக்கம்    செய்வதற்கு ஒழுங்கு படுத்தினர். அகவத்தினால் ஒழுங்கமைக்கப் பெற்ற தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், கைக் குழந்தைள், சிறுவர்கள்,மூதாளர்கள்  மாவீ ரர் பெற் றோர்கள் ,உணர்வாளர்கள்   என்று, தாயக வாசம் வீ ச, மாவீரர் ஈகம் தாங்கி, தேசியப ; பற்று மிளிர தமிழர் நினைவெழுச்சி நாளின் முக்கியத்துவத்தை அனைவருக்கும்   வெளிப்படுத்  தி நின்றமை இங்கு குறிப்பிடத்தக் கதாகும். எமது தேசிய நிறங்களான சிவப்பு. மஞ்சள் ; நிறங்களால் அலங்கரிக் கப் பெற் றிருந்த மண்டபத்தின் உள்ளே  வீ ரர்களது ஒளி முகங்கள் திகழ, துயிலும் இல்லங்கள் வைக்கப் பட்டு, கல்லறைகள் அமைக்கப் பெற் றிருந்த பந ;தலின் உள்ளே. கார்த்திகை மலர் துர்வி மக்கள் வணங்கி நின்றமை  உணர்வைத் தொட்டு நின்றது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளின் நினைவோடு, அனைவரும் விழிகளில் நீ ர்  சொரிய வணங்கி நின்றனர்  . மாவீரர்கள் நாள் என்பதன் புனிதத்தையும். அந்த நாள் வருடத்தில் ஒருமுறை எல்லோரையும் ஒருமித்த சிந்தனையோடு ஒன்றுபட்டு நிற்க வைக்கின்ற வீர வணக்க நாள் என்பதையும் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழர் தேசிய  நினைவெழுச்சிநாள் கனடா வாழ் ஈழத் தமிழ்   மக்கள் அனைவருக ;கும், கனடிய மக்களுக்கும். மீண்டும் உணர் த்தி நின்றது. இந்த ஆண் டு தாயகத்திலலும் புலம் பெயர்ந் த நாடுகளிலும் தமிழர்  தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வு பூர்வமாகக் கொண்டாடப் பெற்றமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும். 
 

செய்திகள்
செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச

திங்கள் May 21, 2018

தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும்,தமிழீழவிடுதலைப்புலிகள்