தமிழர் பகுதியில் நஞ்சைக் கொடுக்கும் தென்னிலங்கை நிதி நிறுவனங்கள்

புதன் சனவரி 09, 2019

தென்னிலங்கையிலிருந்து படையயடுக்கும் சிங்கள கம்பனிகள் தமிழ் பகுதியில் உள்ள வளங்களை சுரண்டுவதற்கு சில தமிழ் அரச அதிகாரிகளும் துணைபோகின்றனர். கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுள்ள இயற்கை வளங்களை அபகரிப்பதற்காக பல நிதி நிறுவனங்கள் முண்டியடிக்கின்றனர்.

கொழும்பு அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தில் சிறீலங்காவின் இல்மனைற் கூட்டுத்தாபனம் இயக்கப்பட்டு கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு போன்ற கடலோரமாகவுள்ள வளங்கள் சுரண்டப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்படுகிறது. கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்றைய நிலையில், தமிழ் மக்களின் மீன்பிடி இடங்கள் தென்பகுதி சிங்கள மீனவர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று,  அம்பாறை மாவட்டத்தின் திருகோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கடலோரவளங்களை சுரண்டுவதற்காக தென்னிலங்கை நிதிநிறுவனம் முயன்ற போதும், அங்குவாழும் தமிழ் மக்களின் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையினை அடுத்து தற்காலியமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், இல்மனையில் அகழ்வுக்கான அனைத்து ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளும் பூர்த்த்தியடைந்துள்ளன. எனினும், குறித்த பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதனுடாகதான் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுக்க முடியும். ஆனால், பிரதேச சபை தவிசாளர் இதற்கான அனுமதியை மறுத்துவிட்டார்.

இதன் அடுத்தகட்டமாகத்தான் மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அல்செமி கேவி மெட்டல்ஸ் என்த தனியார் கம்பனி இல்மனைற் தொழிச்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி, புச்சாகேகேணி, புதூர், நாகபுரம், பால்சேனை, வெருகல், கல்லரிப்பு பகுதியிலுள்ள வானுயர வளர்ந்துள்ள தென்னைகள் அழியும் ஆபத்துகள் உள்ளன.

நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படுவதனால் வெப்பம் நேரடியாக பூமியைத்தாக்குவதுடன் அருகாமைக் கடலிருந்து வெளிவரும் குளிர் காற்று வெப்பமடைவதனால் உள்ளுVர் மழையின் அளவிலும் தன்மையிலும் மாற்றமடைதல், கடலருகாமையில் இருப்பதனால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதனால் குடிப்பதற்கு நீர் துப்பரவற்று இருத்தல் ஆகிய பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இல்மனைற் அகழ்வின் ஆபத்துக்கள் போன்றன காணப்படுகின்றன.

உப்பு நீர் நிலத்தடியில் புகுந்ததால் மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீருக்காக அலைகிறார்கள். தாது மணல் பிரித்தெடுக்கும் காரணத்தினால் அப்பகுதியில் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டு பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இல்மனைற் ஆலையிலிருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக்
கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தல், ஆலையில் பிரித்
தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத்தன்மையை கொண்டியிருப்பதால் ஆலையை சுற்றி இருபது கிலோ மீற்றர் தூரத்துக்குள் வாழும் மக்களும் உயிரினங்
களும் மரபணு நோய்களுக்கும் பல்வேறு வகை புற்றுநோய்களுக்கும் ஆளாகுதல்,
இப்படி எதிர்காலத்தில் கதிரவெளி, புச்சாக்கேணி, புதூர் ,பால்சேனை, வெருகல் ,வாகரை வம்மிவட்டவான் என அனைத்து ஊர் மக்களும் தண்ணீருக்காக அலைய
வேண்டி வரும் நமது ஊரில் தண்ணீர் வளம் மிக குறைவாகதான் உள்ளது.

நிலத்தடியில் 10 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளுர் விவ
சாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்
பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் விவசாயம் நிலத்தடி நீர்வளம் குளங்கள் ஆறுகள் கங்கையை நம்பியுள்ளது. இவ்வாறு இல்மைனைட் தொழிச்சாலை உருவாக்கத்தினால் சுமார் 5 கரைவலைப்பாடுகள் இல்லாமல் போகின்றன. இதனால் நேரடியாக 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதனை தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் வாகரையில் அமையவுள்ள இல்மனைட் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? தனிநபரா?, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? தனிநபரா? முக்கியமல்ல. யார் தோண்டினாலும் இல்மனைட் 5 ஆண்டுகளில் தீர்ந்து போகும்.

இல்மனைட்காரன் உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

இல்மனைட் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும்.

இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளுVர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.

இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் ரூ மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல்குற்றஞ்சாட்டியது.

தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விrவாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன.

இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன எதிர் எதிர்வு கூறப்பட்டுள்ளன.

‘கிழக்கில் இருந்து’ எழுவான்

நன்றி: ஈழமுரசு