தமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018!

June 11, 2018

 09/06/2018 சனிக்கிழமை Rushy field, Harrison Road, Leicester, LE4 7 AB.ல்  மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.

 விழாவுக்கு விசேடமாக வருகைதந்த Leicestershire County உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் பயிற்சிவிற்பாளர் Terry Singh ஐத் தொடர்ந்து Leister City Councillor Baljit Singh, பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கல்விக்கூட ஆசிரியர்களின் மங்கள விளக்கேற்றலுடன் போட்டி கள் ஆரம்பமானது. பிரித்தானிய தேசியக் கொடியை கிழக்கு லெஸ்ரர் தொழிற்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் Keith Vaz அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியுடன் பூபதி விளையாட்டுக்கழக ஒருங்கிணைபாளர் சங்கரன் ஏற்றிவைத்த கழகக்கொடியும் சேர்ந்து பட்டொழி வீசிப்பறக்க போட்டி கள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. 

அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த போட்டி நிகழ்வில் வழமையான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், தடக்களப்போட்டிகள், தண்ட உதை, ஆண்கள் பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டி களுடன் மண்மணம் வீசிய முட்டியுடைத்தல், தலையணைச் சண்டை, சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்களும் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் குதூகலமடைந்தனர். முட்டியுடைத்தல் தலையணைச் சண்டை போட்டி களில் நம் இளந்தலைமுறையினர் பலர் மிகவும் உற்சாகமாக பங்கெடுத்து பரிசுகள் வென்றது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்

சனி யூலை 07, 2018

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து டென்மார்க்கில் நடைபெற்ற வணக்க நிகழ்வு