தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்!

நவம்பர் 07, 2017

பிரபல தமிழறிஞரும் எழுத்தாளருமான மா.நன்னன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் 1924-ம் ஆண்டு ஜூலை 30-ம் திகதி பிறந்தார் மா.நன்னன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பேராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்திய பேராசிரியர் நன்னன், தொலைக்காட்சிகளில் தமிழ் தொடர்பான ஏராளமான நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார். 

தமிழ் கட்டுரை, பாடநூல்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய நூல்களில் பெரும்பாலான நூல்கள் பெரியார் கொள்கைகள் சார்ந்த நூல்கள் ஆகும். பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு. வி.க.விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

முதுமை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த மா.நன்னன் இன்று காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.

செய்திகள்
ஞாயிறு January 14, 2018

தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்...

ஞாயிறு January 14, 2018

தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு January 14, 2018

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு...

சனி January 13, 2018

நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு கhலத்தால் அழியாத கhவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் ஆவார்கள். தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார்.