தமிழினத்தின் விடுதலையின் தீராத என்றும் மாறாத பற்றாளன்!

யூலை 15, 2017

தமிழினத்தின் விடுதலையின் தீராத என்றும் மாறாத பற்றாளனும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக கடந்த 3 தசாப்தங்களுக்கு  மேலாக உழைத்தவரும் குரல் தந்து கொண்டும் இருந்தவரான ஈழ விடுதலைப்பற்றாளன் ஐயா வீர சந்தானம் அவர்கள் தனது 71 வது வயதிலே சாவடைந்த செய்தியானது தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல தமிழீழ மக்களையும், உலகத் தமிழ்மக்களையும் ஒரு கணம் பேரதிர்ச்சிக்கும், மிகுந்த துயருக்கும் இட்டுச் சென்றுள்ளது. 

     வீர சந்தானம்; ஐயா அவர்கள்  தமிழினத்தில் மட்டுமல்ல உலகிலேயே ஒரு தலைசிறந்த ஓவியனாவார். அது மாத்திரமல்ல நாடக, திரைப்பட நடிகனாகவும் கலைஞனாகவும் சிறந்து விளங்கியவர் என்பதும்  இவ்வகை ஆற்றல்களையும், திறன்களையும் தனது தனிப்பட்ட சொந்த தேவைகளுக்கு பாவிக்காமல் தமிழினத்தின் விடுதலைக்காகவும்,ஈழவிடுதலைக்காகவுமே செயலாற்றி வந்ததொரு உன்னதமான பச்சைத்தமிழனாவார். 

இவரின் தெளிந்த அரசியல் அறிவும், பேச்சாற்றலும், சமூகநலச் செயற்பாடுகளும் தமிழீழ விடுதலை பற்றியும், அந்த விடுதலையை முன்னெடுத்த உன்னதமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலும், தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் அளவற்ற அன்பும், நம்பிக்கையும், பற்றும் கொண்டவராகவே இருந்து வந்திருக்கின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் ஐயா வீர சந்தானம் அவர்களின் இல்லத்திற்கு சென்று வந்ததே அவரின் விடுதலை மீதான பற்றுதல் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளலாம். 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும், அதன் உன்னத தியாகத்தையும் தேசியத் தலைவர் மீதான அவரது பற்றுதலையும் இவர் சாவடையும் வரை ஆற்றிய பணிகள் தான் எம் எல்லோர் கண்களிலும் மனங்களிலும் பசுமையான நினைவுகளாக இருந்து கொண்டு இருக்கின்றது. ஐயா வீர சந்தானம் அவர்கள் முன்னிலையில் தமிழ் மொழியைப்பற்றியோ, அதன் விடுதலை பற்றியோ யாரும் கொச்சைப்படுத்திவிட்டுச் சென்று விட முடியாது.

    தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும,; தமிழீழ மக்களின் இன அழிப்புக்கும் எதிராக தனது அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்களை முன்னெடுத்தவர்.  தனது உணர்வுகளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தமிழீழ மக்களோடும் பகிர்ந்து கொண்டவர். இவரின் வாழ்க்கைத் துணைவியார் மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் தினமும் அவரின் தேவைகளையும், துயரங்களையும் தனது சந்தோச சுமையாக ஏற்றுக் கொண்ட நல்லதொரு மனதநேயமிக்க குடும்பத் தலைவனாக இருந்து வந்தவர்.

 தான் வளர்த்து வைத்திருக்கும் தாடிக்குள்ளே பலநூறு சிந்தனைகளும், எண்ணங்களும், விருப்பங்களும் உண்டு என்று கூறும் ஐயா அவர்களின் வார்த்தைகளை தமிழீழ மக்களின் இன அழிப்பின் நினைவாக தஞ்சாவூர் மண்ணில் உருவாக்கம் கண்டு நிற்கும் முள்ளிவாயக்;கால் முற்ற நினைவு மண்டபத்திலேயே தூரிகைகளால் இவர் வரைந்த ஓவியங்களில் என்றுமே பார்க்கக் கூடியதாகவுள்ளது.  இவர் வரைந்த ஓவியங்களும் தமிழீழ விடுதலைப் போராட்டம் முகிழ்ச்சி பெற்ற நேரத்திலும் கணனிகள் இல்லாத அக்காலப்பகுதியிலும் வெளிச்சம் என்ற சஞ்சிகைகளில் வெளிவந்து  பெரும் பரப்புரைகளை தமிழீழ விடுதலைக்கு செய்திருந்தன. தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்கள் மத்தியிலும், திரையுலகம் சார்ந்தவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மையையும், தேவையையும் தெரியப்படுத்தியவர்களில் இவரின் பங்கும் கூடுதலாக இருந்தது. 

 தனது 71 வது வயது வரை அவர் மூச்சு விடுதலையும், தமிழீழ மக்களின் சுதந்திர விடுதலை வாழ்வுமாகவே இருந்து வந்துள்ளது.  இந்த விடுதலை பற்றாளனும் இவர் போன்ற பல்லாயிரம் உயிர்களும் ஏற்றி வைத்த விடுதலைத் தீ உலகெங்கும் சுடர் விட்டுக் கொண்டேயிருக்கின்றது. அந்த விடுதலைத் தீ அணைந்து விடாது காக்க வேண்டிய மிகப்பெரிய கடமை உலகத்தமிழ் மக்களோடு தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் உண்டு. அதைத் தொடர்ந்தும் உறுதியோடு அணையாது பாதுகாத்து நிற்போம். 

 அதுவே விடுதலையை நேசித்துச் சாவடைந்த இவர்களுக்கும் இவர் போன்றோருக்கும்; நாம் செய்கின்ற கடமையாகும். இவரது இழப்பால் துயரங்கொண்டு நிற்கின்ற அனைத்து உள்ளங்களோடும் பிரான்சு வாழ் தமிழீழ மக்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உப கட்டமைப்புகளும் தமது துயரங்களைப் பகிர்ந்து கொண்டு தலைசாய்த்து, மீண்டும் விடுதலையின் வெற்றிக்காக உறுதியுடன் தலைகளை நிமிர்த்திக் கொள்கின்றோம்.

' தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

செய்திகள்
வியாழன் May 24, 2018

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் 

புதன் May 23, 2018

யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி