தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு டென்மார்கில் கவனயீர்ப்பு!

May 18, 2018

டென்மார்கின் தலைநகரில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில்  சிங்கள இன வெறியர்களின் உச்சகட்ட தமிழின அழிப்பு அரங்கேறி இன்றுடன் (18.05.2018 ) ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.

உலக நாடுகள் மௌனமாக இருக்க சில நாடுகளின் ஆதரவுடன் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்கள பேரினவாதிகள் உறவுகளை கொன்று குவித்தனர். எத்தனையோ எமது தமிழ் பெண்களை மானபங்கபடுத்தி படுகொலை செய்ததுடன், பச்சிளம் குழந்தை முதல் எமது உறவுகளின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தன அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில்.

பாதுகாப்பு வலயம் என அறிவித்து அப் பகுதிகளில் உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட கொத்துகுண்டுகளை எம் மக்கள் மீது வீசி எறிந்தனர். எங்கே ஓடுவது என தெரியாமல் எமது உறவுகள் அதே மண்ணில்த்தான் பல ஆயிரக்கணக்கில் உயிர்நீத்தனர்.

இன்றும் மாறாத வடுக்களாக எத்தனையோ ஆயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டு இன்றும் முள்ளிவாய்க்காலின் வடுக்களை சுமந்தவண்ணம் உள்ளனர், இந் நாள் தமிழர்களின் இன அழிப்பு நாள்.

அதன் நினைவுகளை சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் டென்மார்க் Kongens Nytorvல் ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களையும் மாவீரர்களையும் நினைவுகூர்ந்து Bertal Thorvaldsens Plads எனும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்ட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தினர், அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக டெனிஸ் மொழியில் கவிதைகள், பேச்சுக்கள் மற்றும் டென்மார்க் பாரளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளும்  இடம்பெற்றதோடு டென்மார்க் அரசின் 179 பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்று அமைச்சர்களிடமும் மொத்தம் 192 பேர்களின் கைகளில் சேரும் வண்ணம் அறிக்கை ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.