தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஐ.நா முற்றத்தில் திரண்டது தமிழர் சேனை

செப்டம்பர் 18, 2017

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களைக் கொன்றொழித்தமைக்கு பன்னாட்டு அரசுகள் மற்றும் ஐ.நா அமைப்பிடம் நீதி கோரி ஜெனிவாவில் இன்று பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மழைக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு சுவிற்சர்லாந்தில் மட்டுமன்றி பன்னாடுகளிலும் இருந்து தமிழின உணர்வாளர்களும் தமிழ் மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டதொடரின் இரண்டாம் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகிய நிலையிலேயே தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது. 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம் ஜெனிவா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகி ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்தது.

தியாகி லெப்டினன்ட் கேணல் திலீபனின் நினைவு நாள்களில், திலீபன் முன்வைத்தமையைப் போன்று ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
   
சிறிலங்காவில் பல தசாப்தங்களாக தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும், 

ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 இல் சிறிலங்கா மீது விடுத்த அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும், 

போன்றன உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழீழ தேசியத் தலைவரின் உருவப்படத்தைத் தாங்கியிருந்தனர். அத்துடன் கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளையும் தாங்கியிருந்தனர். 

இப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி, தமிழின உணர்வாளர் வ.கௌதமன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.