தமிழினப் படுகொலை நாள் 18.05.2018 - டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

May 18, 2018

மே 18, உலக வரலாற்றில் தமிழ் இனத்தின் இரத்தக் கறை படிந்த நாள், சிங்கள பேரினவாதிகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த இறுதிநாளான மே 18 இன்றாகும்.

உலக நாடுகள் மௌனமாக இருக்க சில நாடுகளின் ஆதரவுடன் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்கள பேரினவாதிகள் உறவுகளை கொன்று குவித்தனர். எத்தனையோ எமது தமிழ் பெண்களை மானபங்கபடுத்தி படுகொலை செய்ததுடன், பச்சிளம் குழந்தை முதல் எமது உறவுகளின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தன அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில்.

பாதுகாப்பு வலயம் என அறிவித்து அப் பகுதிகளில்  உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட கொத்துகுண்டுகளை எம் மக்கள் மீது வீசி எறிந்தனர். எங்கே ஓடுவது என தெரியாமல் எமது உறவுகள் அதே மண்ணில்த்தான் பல ஆயிரக்கணக்கில் உயிர்நீத்தனர்.

இன்றும் மாறாத வடுக்களாக எத்தனையோ ஆயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டு இன்றும் முள்ளிவாய்க்காலின் வடுக்களை சுமந்தவண்ணம் உள்ளனர், இந் நாள் தமிழர்களின் இன அழிப்பு நாள்.

எமது அன்பிற்குரிய புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, தமிழக மக்களே நாங்கள் இன்று எமது இனம் இனஅழிப்பு செய்யப்பட்ட 9ஆவது ஆண்டிலே நிற்கின்றோம்.

ஒரு நாட்டினை நிர்வகித்த தமிழீழ மக்கள் நாம் இன்று எங்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வேண்டி, அனைத்துலகத்திடம் தொடர்ந்;தும் போரடிக்கொண்டு இருக்கின்றோம், அதே சமயம் தாயகத்தில் எமது உறவுகள் பல வருடங்களாக வீதிகளில் இறங்கி தொடர்ந்து தமது பறிபோன சொந்த நிலங்களுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியும் சிறிலங்கா அரசிடமும், சர்வதேசத்திடமும் தெடர்ந்து நீதி கேட்டு வருகின்றார்கள்.

எப்படி சிங்கள பேரினவாதிகள் ஓரணியில் திரண்டு எமது மக்களை கொத்துகொத்தாக கொன்று குவித்தனரோ அதே போன்று தமிழர்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் அதே நேரம் உலக நாடுகளுக்கு இவ் இன அழிப்பு நாள் ஒரு செய்தியை சொல்லும்.

முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல…..

நன்றி

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
டென்மார்க்

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....