தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா சபை முன்றலில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

புதன் மார்ச் 16, 2016

ஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது உணர்வுகள் அனைத்தும் தாயகத்தை நோக்கியே துடிக்கின்றது என்பதற்கமைவாக,சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கவனயீர்ப்புப் பேரணியானது 14.03.2016திங்கட்கிழமைஅன்றுசுவிஸ் நாட்டின் ஜெனிவா தொடரூந்துநிலையத்திற்கு அருகாமையில் உள்ளபூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுஉலகத்தமிழர்களின் ஒன்றுபட்டஉரிமைக்குரலுடன்,அவர்கள் தாங்கியபதாகைகள் மூலம்வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து,நகர்ந்துஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது. இக் கவனயீர்ப்புப் பேரணியில் ஐரோப்பாவின்பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கானமக்கள் கலந்துகொண்டு தங்கள் உரிமைக்குரலை எழுப்பினர். 

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியஒன்றுகூடலானதுதமிழீழத் தேசியக்கொடியேற்றப்பட்டுஈழத்தமிழர்களின் விடியலுக்காகதீயினில் தம்மையே ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன்அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இப் பேரணியில்,வேற்றினமனிதநேயசெயற்பாட்டாளர்கள்,இளையோர்களின் கருத்துரை, எழுச்சிஉரைகளுடன், பேரணிக்கானபிரகடனமும்,காலத்திற்கேற்பகருப்பொருளைக் கொண்டஉணர்வுவெளிப்பாடும் இடம்பெற்றிருந்ததுடன் வேற்றினத்தவர்களுக்குதமிழினஅழிப்பைவிளக்கும் துண்டுப்பிரசுரங்களும் இளையோர்களால் விநியோகிக்கப்பட்டது.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டுதமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியாகநிறைவுபெற்றன.