தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

May 18, 2018

ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சி 8 வது நாளாக நேற்றைய தினம் காலை Nürnberg நகரத்திலும் மாலை நேரம் Stuttgart நகரத்திலும் மக்கள் நடமாடும் மத்தியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

 ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசால் வரலாற்று ரீதியாகமுன்னெடுக்கப்பட்ட இனவழிப்பை இன்றும் நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பை     ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டது. 

கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டதோடு தேவையான விளக்கங்களையும் மேலதிகமான உரையாடல்களுடன் ஊடாக பெற்றுக்கொண்டனர். இக் கண்காட்சியில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரமும் வேற்றின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.  

இன்றைய தினம்  தமிழின அழிப்பு நாள் மே  18 அன்று Düsseldorf மாநகரத்தில் மதியம்  2 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளூராச்சி பாராளுமன்றத்துக்கு முன்பாக வணக்க நிகழ்வுகளும் நடைபெறும்.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.