தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக்கண்காட்சி

செவ்வாய் ஏப்ரல் 26, 2016

தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக்கண்காட்சிகள் வீபோ நகரில் அமைந்துள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழர் தேசம் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருவதை டெனிஸ்மக்களுக்கும் மற்றய இன மக்களுக்கும் எடுத்துரைக்குமுகமாக வீபோ  நகரில் உள்ள நூலகத்தில் கண்காட்சி நடைபெறுகின்றன.

அதே போல் நீங்களும் உங்கள் நகரங்களில் உள்ள நூலகங்களில் கண்காட்சியை வைப்பதற்கு விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தாயக விடுதலைக்காக விலைமதிப்பற்ற அர்ப்பணிப்புகள் செய்த எமது மக்களையும், மாவீரர்களின் தியாகங்களையும் பேணிக்காக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும்.

ஒழுங்கமைப்பு : டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
தொலைபேசி இலக்கம் : 51272325