தமிழீழத் தாயகத்தில் "எமது நிலம் எமக்கு வேண்டும்"

சனி பெப்ரவரி 11, 2017

தமிழீழத் தாயகத்தில் "எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற கோரிக்கை முன்வைத்து 10  நாட்களை கடந்து தமது சொந்த நிலங்களை மீட்க போராடிவரும் கேப்பாப்பிலவுப் போராட்டத்திற்குத் தோள்கொடுப்போம்:

கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் நிலங்களை மீட்பதற்காகத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.  அவர்களுக்குத் தோள் கொடுப்பதற்காக பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக
No 10 Downing Street
Westminster,
London
Sw1A 2AA
Nearest tube: Westminster
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12.02.2017) அன்று மதியம் 01:00 மணி தொடக்கம் 04:00 மணி வரை போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டி நிற்கிறோம்.

உறவுகளே… உறங்கியது போதும் உணர்வுடன் எழுந்திடு!

பிரித்தானியா வாழ் ஈழத் தமிழர்களாகிய நீங்கள்   இப் போராட்டத்தில் கலந்து கொண்டு உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

எமது உறவுகளின் போராட்டத்திற்கு வழுச் சேர்க்கவும் பிரித்தானியாவிலும் துயரத்தோடு நீதி வேண்டி நிற்பதை இந்த நாட்டு அரசிற்கு உணர்த்த அலையென திரண்டு வருமாறுஅனைத்து தமிழ் மக்களையும்  இந்  நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புகுழு