தமிழீழத் தேசியக் கொடிக்கு மதிப்பளித்தல்!

Sunday July 22, 2018

ஒருநாட்டின் தேசிய இனங்கள்,நாட்டுமக்களின் பண்புகள்,ஆட்சி, இறைமைஎன்பவைஉட்படஅந்தநாட்டைக் குறிக்கின்றஒட்டுமொத்தமானபொதுச்சின்னமாகத் தேசியக் கொடிவிளங்குகிறது.

உலகம்வியக்கக் கூடியபுதுமையானவரலாற்றைப் பெற்றஎமதுதேசியக்கொடியைஏற்றிப் போற்றும் முறையைத் தமிழீழமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டு மென்பதற்காகத் தேசியக்கொடிபயன்பாட்டுவிதிக்கோவை 1996 ஆம் ஆண்டுமாவீரர்ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டிருந்தது. 28 கோட்பாட்டுவிபரம் கொண்டமாவீரர்நாள் கையேட்டிலும், இன்னும் இந்தவிடயம் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லப்படவேண்டும் 

என்றநோக்கில்,மாவீரர்கேணல் பரிதிஅவர்களின் புத்தகத்திலும்,காந்தள் கரிகாலன் என்றபுத்தகத்திலிலும், ஏனைய விடுதலையைநேசிக்கின்ற  இணையத் தளங்களிலும் இது வெளிவந்திருக்கின்றதுஎன்பதையும் கவனத்தில் தந்துநிற்கின்றஅதேவேளை,தேசியக் கொடியின் புனிதத் தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்காகஎம்மவர்களின் தான்தோன்றித்தனமான,எழுந்தமானவினாக்களுக்கும்,செயற்பாடுகளுக்கும் மத்தியிலும்,அவர்களால் ஏற்படுத்தப்படுகின்றநெருக்கடிகளையும்,அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டுதேசியக் கொடிக்குரியமரியாதையைசரியாகநெறிப்படுத்துவதில் நாம் மிகுந்தகவனம் எடுத்துப் பணியாற்றிவருகின்றோம்.

தமிழீழம்என்றஎமதுதாய்நாடுவிடுதலைபெறவேண்டும் எம்மைப்  பிணைத்திருக்கும் அடிமைவிலங்குகள் உடைத்தெறியப்பட்டுஎம்முடையமக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாகவாழவேண்டும். இந்த இலக்கைஅடையவேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும். இரத்தம் சிந்தி,மரணத்தின் நிழலில் வாழவேண்டும் என்றதேசியத் தலைவரின் பாதையில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமதுஅளப்பரிய உயிர்களைஈகம்செய்து உலகின் மூத்த இனங்களில் ஒன்றானதமிழ் இனத்தின் புகழைஉலகறியச் செய்து,எமது இனத்தைத் தலைநிமிரவைத்துள்ளனர் மாவீரர். தாய் மண்ணிலேஎமதுமக்களும்,மாவீரர்களும் விடுதலைவேள்வியில் தம்மை இணைத்துநின்றிருந்தவேளையில்,அந்தவிடுதலைத் தீயைஎதிர்கொள்ளமுடியாது,சிங்களபேரினவாதத்தின் இனவழிப்பில் இருந்துதப்பிஉயிர்வாழ்வதற்காகபுலம்பெயர்தேசங்கள் எங்கும் பரவிப்போனதமிழீழமக்களின் நலனில் அக்கறைகொண்டு,ஈழத்தமிழர்கள் உலகில் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் தங்களுடைய மொழி, பண்பாடு,கலை, கலாசாரம்,அரசியல்,விடுதலை,சுதந்திரமானவாழ்வுஎன்பவற்றைமறந்துவிடாதுவாழவேண்டும.; 

அதற்குஉறுதுணையாகதமிழீழத் தேசியதலைவரின் தூரநோக்குசிந்தனையிலும்,பணிப்பிலும் புலம்பெயர்தேசங்களில் அந்தநாட்டுச் சட்டதிட்டங்களுக்கமையப் பதிவு செய்யப்பட்டதே தமிழர்ஒருங்கிணைப்புக்குழுஅமைப்பாகும். சட்டதிட்டங்களுக்குமதிப்பளித்துபதிவுசெய்யப்பட்டஅமைப்பாககடந்த 35 ஆண்டு;களுக்குமேல் பல்வேறுசோதனைகளையும்,வேதனைகளையும்,துரோகங்களையும்,உயிர்பறிப்புக்களையும்,கட்டவிழ்த்துவிட்டஅரட்டுக் கோன்மைகளையும் ,காரணமின்றியமனித நேயச் செயற்பாட்டாளர் கைதுகளைம், சிறையடைப்பு, வதிவிடஉரிமைகள் பறிப்பு, மனவுழைச்சல்களுக்குமத்தியிலும்,எமது இனத்தின் நியாயமான நிலைப்பாட்டை நிலைநிறுத்திதொடர்ந்துஅனைத்துஐரோப்பியநாடுகளிலும்,சர்வதேசநாடுகளிலும் எமதுகட்டமைப்பு செயற்பட்டேவருகின்றதுஎன்பதைஉலகத் தமிழர்யாவரும் நன்றாகஅறிவார்கள்.

அந்தவகையில் ஓர் இனத்தின் அத்தனைவிடயங்களையும் கருத்திற் கொண்டுஅந்த இனத்திற்குக் கேடு ஏற்படாதவகையில் உயிர்கொடுத்துஉன்னதமானவழியில்தான் பிரான்சுதமிழர்ஒருங்கிணைப்புக் குழுவானதுசென்றுகொண்டிருக்கின்றது. தமிழினத்தின் தேசியநிகழ்வோ,தமிழீழத் தேசியக் கொடியைஏற்றுவதோ,தேசியக் கொடியைஉரியமரியாதைக்குபாவிப்பதோஎனஅனைத்தையும் நெறிப்படுத்தி,கொடிக்குரியபுனிதத்தைப் பேணி,செயற்படுத்தவேண்டியகடமைப்பாடுதமிழர்ஒருங்கிணைப்புக் குழுக்களிற்கேஉண்டு.

 தமிழர்ஒருங்கிணைப்புக்குழுஎன்பதுதனிப்பட்டசிலரின் குழுச் செயற்பாட்டுக் கட்டமைப்புஅல்ல. தமிழர்ஒருங்கிணைப்பானதுஒவ்வொருநாடுகளில் வாழும் தமிழீழ மக்களை ஒன்றிணைக்கும்;  தாய்க்கட்டமைப்பாகும். அதன் செயற்பாடுகளில் விமர்சனங்கள் இருக்குமானால்,அவற்றைநேரடியாகதுணிந்ததிறந்தமனதுடன் உரியகட்டமைப்புகளுடன்; சென்றுதீர்வுகாணவேண்டியபொறுப்புதேசியவிடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும் உண்மையாகநேசிப்பவர்கள் செய்யவேண்டியவிடயமாகும் அதேவேளை தமிழினத்தை அழிக்கநினைக்கும் அடிவருடிகளுக்கும்,சிங்களப் புலனாய்வுக்கும் துணைபோய் அநாமதேயபெயர்களில் அறிக்கை விடுவதும், மக்களைக் குழப்புவதும்,தமிழன் தன் இனத்திற்குச் செய்யும் மிகப்பெரும் துரோகச் செயலாகப் பார்க்கப்படுவதோடு, இவர்களைமக்கள் முன் இனம் காட்ட வேண்டிய நிலைக்குநாமும் விரும்பியோ விரும்பாமலோதள்ளப்படுகின்றோம் என்பதைதெரிவித்துக் கொள்வதுடன். இதுஎமதுமக்களாலும்,உணர்வுள்ளம் கொண்டதேசப்பற்றாளர்களாலும்,பணியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளமுடியாததொருவிடயம் என்பதையும் முன்வைக்கவிரும்புகின்றோம்.

எமதுதேசவிடுதலைப் போராட்டத்தில் காலத்தைக் கடந்துசெல்லும் புறச்சூழ்நிலைகள் இருந்தமையாலும் ,சர்வதேசத்தில் பல விடுதலைப் போராட்டங்கள் பொருளாதாரச் சுமையால் மழுங்கடிக்கப்பட்டவரலாற்றை படிப்பினையாகக் கொண்டு,தமிழீழத் தேசியத்தலைவரின் முன்னோக்குச் சிந்தனையில் உருவாகிய மனித நேய அமைப்பே தமிழர் புனர்வாழ்வுக் கழகமாகும்.

 இந்தவகையில் ஐரோப்பியநாடுகளில் இயங்கிவரும் தமிழர்புனர்வாழ்வுக் கழகங்கள் அந்தநாட்டில் உள்ளஒருங்கிணைப்புக் குழுவுடனும் ஏனைய பொதுஅமைப்புகளுடனும் தமதுஉறவைப்பேணிச் செயற்பட்டேவருகின்றன.

 2007 இல் தமிழர்ஒருங்கிணைப்புக்குழுஅமைப்புகளுக்குஅனைத்துலகரீதியில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டவேளைஅதனைக் காரணம் காட்டிபிரான்சுதமிழர்புனர்வாழ்வுக் கழகமானது 2008 ஆம் ஆண்டிலிருந்துதொடர்ந்து 10 ஆண்டுகளாகதனித்துவமாகவேதமதுசெயற்பாட்டினைச் செய்துவருகின்றது. அதேவேளைகடந்தஆண்டுகளைப் போல 08.07.2018 அன்றும் பிரான்சுதமிழர்புனர்வாழ்வுக்கழகம் நடாத்தியதமிழர்விளையாட்டுவிழாவில் பிரெஞ்சுநாட்டுக் கொடி,ஐரோப்பியக் கொடி,மற்றும் தமிழர்புனர்வாழ்வுக் கொடியைஏற்றிதமிழர்விளையாட்டுவிழாவினைக்  கொண்டாடிமகிழ்ந்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைதமக்கு சாதகமாகநாம் தமிழர்கட்சியினர்பயன்படுத்தி புனர் வாழ்வுக் கழகத்திடமோ, அல்லதுவேறுஎவரிடமோஅனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் நாம் தமிழர்கட்சிக்குபிரச்சாரம் செய்யப்போவதாகக் கோரிப் பெறப்பட்ட கூடாரத்தின் முன்பாக ,தமிழீழக் கொடிப்பாடல் இசைக்கவிட்டுதமிழீழதேசியக் கொடியைஏற்றியுள்ளனர்.

இதனால் விளையாட்டுவிழாவுக்குச் சென்றிருந்தமக்கள் குழப்பமடைந்ததுடன் கடந்த 10 ஆண்டு;களாகபிரான்சில் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும்,தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தினருக்கும் ஏற்பட்டமுரண்பாட்டில் முக்கியமானதாக கருதப்படும், தமதுவிளையாட்டுவிழாவில் தமிழீழதேசியக் கொடியேற்றமாட்டோம் என்ற நிலைப்பாட்டை மாற்றிதங்கள் சார்பில் கொடியேற்றாது நாம்தமிழர்கட்சியினரை எவ்வாறுதமிழீழத் தேசியக் கொடியைஏற்ற அனுமதித்தார்கள் என்றபல்வேறுதரப்பினரின் கேள்விக்கும் ,ஊடகங்களின் கேள்விக்கும் இன்றுவரைபிரான்சுதமிழர்புனர்வாழ்வுக்கழகம் பதிலளிக்காமல் இருப்பதுஅவர்களின் நிலைப்பாட்டைஒருகேள்விக் குறியாக்குகிறது.

தமிழகத்தில் அன்றுமுதல் இன்றுவரைகட்சிபேதமின்றி பல கட்சிகள் தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு தமதுபங்கினைஅரசியல் ரீதியாகவும்,மனிதநேயத்துடனும் செய்து கொண்டேவருகின்றநிலையில்,நாம் தமிழர்கட்சிக்குமட்டும் ஏன் இவ்வாறான உரிமையை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சுவழங்கியது? அல்லது இது சம்பந்தப்பட்டவர்களின் அத்துமீறியசெயற்பாடா? என்பதைநடந்துமுடிந்து பல நாட்களாகியும் தமிழர்புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு அதுபற்றிமக்களுக்கோ, ஊடகங்களுக்கோ தெரிவிக்கவில்லை என்பதுமிகுந்தவேதனைக்குரியது.

 இது இக்கட்டானதொருநிலையைசகதாயககட்டமைப்புகளுக்குஏற்படுத்தியிருப்பதுடன் தொடர்ந்து பல குழப்பங்கள் ஏற்படவழிகோலியும் உள்ளது.

“எத்தனை எத்தனைவேங்கைகள் ரத்தத்தில் ஏறியகொடி,பெரும் சத்தியவேள்வியில் செத்தவர்மீதினில் சாற்றியகொடி, ஆயிரமாயிரம் பேரெனவேங்கைகள் ஆக்கியகொடி,எம் இரத்தத்தால் சிவந்ததமிழீழத் தேசியக்கொடிதமிழீழமக்களின் நெஞ்சுநிமிர்வோடும், இலட்சியஉறுதிகொண்டமனதோடும்,வல்லமைதாரும் மாவீரரேஎன்கின்ற இதய வேண்டுதலோடும்  உரிய இடத்தில்,கொடியேற்றத் தகுதிகொண்டவர்களால் ஏற்றிவைக்கப்படுதல் வேண்டும்;. அந்தபுனிதத் தன்மையைக் கெடுக்கும் நோக்கில் தமது தனிப்பட்ட விருப்புகளுக்காகவோ , சொந்தகட்சிஅரசியல் புகழுக்காவோ,தமிழீழத் தேசியக் கொடியை,உரியவர்களின் அனுமதியின்றிஏற்றுவதும்,ஏற்றுவதற்குத் துணைபோவதும் தேசியக் கொடியைமட்டுமல்ல,அந்தகொடியைதம் உயிரைவிடமேலாகப் போற்றிநிற்கும் இனத்தையேஅவமதிக்கும் ஒர்செயலாகவேமக்களால் கருதப்படுகின்றது. தமிழர்வரலாற்றில் ஓர் அவமானச் செயற்பாடாகவே இது  பதிவாகின்றது. 

எனவே இனியும் எவரும் இவ்வாறானசெயற்பாடுகளைச் செய்யவேண்டாம் என்பதோடு, அதற்குஎவரையும் துணைபோகவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். 

மண்விடுதலைக்காகதம்மைஅர்ப்பணித்துப் போராடிஎல்லாம் இழந்துமாண்புடன் மண்ணில் வீழ்ந்து விதையாகிப்போன மாவீரர்களுடன் வாழ்ந்துஅவர்களின் இலட்சியக் கனவைநெஞ்சில் தாங்கிநம்பிக்கையோடு இன்னும் பலர்தாய்மண்ணிலும், புலம்பெயர்தேசங்களிலும் அமைதியாகஎல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அன்பார்ந்ததமிழீழமக்களே!

இன்றுநாம் எதிர்கொள்ளும் நெருக்கடியானசூழ்நிலையில் எதிரியின் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும். எமதுமனஉறுதிக்குஎதிரிசவால் விடுகின்றான்;. இந்தச் சவாலைஏற்பதற்குஎமதுஆன்மஉறுதியைத் தவிரவேறுஆயுதங்கள் தேவையில்லைஎன்று,எமதுதேசியத் தலைவர்அவர்கள் 1991 ஆம் ஆண்டுமாவீரர்நாள் கொள்கைப் பிரகடனஉரையில் கூறியதையே இன்றுநாம் மேற்கோள் காட்டிநிற்கின்றோம்.

“தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்’’
தமிழர்ஒருங்கிணைப்புக்குழு–பிரான்சு