தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை27

நவம்பர் 25, 2016

விடுதலைவேண்டிக் களமாடி வீழ்ந்த எமது வீரப்புதல்வர்களை நாம் நினைவில் உயிர்ப்பித்துப்
பூசித்து உறுதி மொழியை ஒவ்வொரு தமிழனும் எடுப்போம்.

உங்கள் நினைவுகள் சுமந்த,
உயிர்க்கூடுகள் மீது.
கோரை படர்ந்திருக்க,
எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால்,
உங்களுக்கு நிவேதனமாகின்றது!
அரவங கேட்டுச் சத்தமிடும்,
ஆட்காட்டிக்  குருவிகள்,
உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன !

விரிந்த எனது தேசத்தின்,
பரந்து படர்ந்த வெளியெங்கும்,
அறைந்து நிற்கிறது வெறுமை!

மாவீரர் ஆலயம் உழுதாலும் உலர்ந்தாலும் உயிராலே தீபங்கள் ஏற்று உலகம் வியக்கட்டும் 

விரல் துடைக்கும்
நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,
விழிபொசுக்கும்
உடன்பிறந்த துரோகத்தின் காடுகளை
நுரைசிவக்கும் கடல் அலையே!
மறுகரைக்குச் சொல்க
நொறுங்காது தமிழீழம்
புலிப்படைதான் வெல்லும்! 

செய்திகள்
திங்கள் January 16, 2017

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு