தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் முதல்நாள் நிகழ்வுகள்!

யூலை 08, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழ தேசிய  மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் முதல்நாள் நிகழ்வுகள் இன்று (07) பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சார்சேலில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து   08.07.2018 மற்றும் 14 ஆம் நாள்களில் தெரிவுப் போட்டிகளும் 15 ஆம் நாள் இறுதிப்போட்டியும் காலை 9.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளன.

இன்று காலை ஆரம்பநிகழ்வாக  16.11.2007 அன்று மன்னார் நீலச்சேனைப் பகுதியில் சிறீலங்கா படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன் தமிழ்வீரன் அல்லது சிலம்பரசனின் சகோதரி லெப்டினன் சங்கரின் நினைவுத் தூபியில் சுடர்வணக்கத்தையும், மலர்வணக்கத்தையும்  தொடர்ந்து பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டுத்துறை போட்டி முகாமையாளர் திரு இராஜலிங்கம் ஆசிரியரினால் கழக பொறுப்பாளர்களுக்கு போட்டிகளின் நடைமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.

இன்று தெரிவுப் போட்டிகளும் , சில இறுதிப் போட்டிகளும் இடம் பெற்ற சமவேளையில் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கிவைக்கப் பட்டன.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.