தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்!

Monday July 16, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சார்சேலில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளன. 15  காலை 9.00 மணி தொடக்கம் இறுதிப்போட்டிகளின் தொடர்ச்சியும் பரிசளிப்பு வைபவமும்  நடைபெறது.  

14 ஆம் திகதி காலை ஆரம்பநிகழ்வாக 27.03.1988 அன்று இந்திய இராணுவத்தினுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தனேந்திரன் என்று அழைக்கப்படும் அன்ரன் கிறிஸ்டினோல்ட்டி இன் சகோதரி  லெப்டினன் சங்கரின் நினைவுத் தூபியில் சுடர்வணக்கத்தையும், மலர்வணக்கத்தையும் தொடர்ந்து பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டுத்துறை போட்டி முகாமையாளர் திரு இராஜலிங்கம் ஆசிரியரினால் கழக பொறுப்பாளர்களுக்கு போட்டிகளின் நடைமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.

இன்று இறுதிப் போட்டிகள் இடம் பெற்ற சமவேளையில்  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.