தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் - தமிழர் கடலில் ஒன்றுகூடுவோம்!

வியாழன் மே 17, 2018

மே  20  ஞாயிறு   அன்று மாலை  நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு

நினைவேந்தல் நிகழ்வென்பது அரசியல் பொதுக்கூட்டமோ போராட்டமோ அல்ல. இது தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வு.

இந்நிகழ்வுக்கு தமிழக அரசோ காவல்துறையோ இடையூறு ஏற்படுத்துவது முன்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரானது. அவ்வாறு இடயூறு செய்தால் அது தமிழீழ விடயத்தில் அவர்களின் நிலைப்பாடு மக்கள் முன் அம்பலப்படும் சூழல் தான் உருவாகும்

தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டிய இந்நிகழ்வை மக்கள் நடத்துவதற்கு ஒத்துழைப்பாவது அவர்கள் வழங்க வேண்டும்.

விடுதலை ஓவியம் தீட்டுவோம்! - தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்


வெற்றிடத்தில் விடுதலைக் கதைகளை பரவிடச் செய்வோம்!
வெள்ளைக் காகிதத்தில் சுதந்திர வேட்கையினை ஓவியமாய் தீட்டிடுவோம்!


சிவந்த தமிழீழத்தின் விடுதலை மூலம் அடிமை இருளினை விலகிடச் செய்திடுவோம்!

மனித நேயத்தின் மீதும், இயற்கை நீதியின் மீதும் பெரு விருப்பம் கொண்டோர் அனைவரும் கூடுவோம். 
இது நமது கடல். நமது ஓலம் சுமந்த கடல். நமது கண்ணீரினையும், புலம்பலையும், அழுகையினையும், விடுதலை வேட்கையினையும் இந்தக் கடலும், காற்றும் தான் சுமக்க வேண்டும்.

தமிழர் கடற்கரையான மெரீனாவில் கூடுவோம். மே 20, ஞாயிறு மாலை 4 மணி, கண்ணகி சிலை அருகில்


இனப்படுகொலையின் மறுவடிவமான வெள்ளை வேன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? 


குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்த பின்னும், வெள்ளை வேன்களால் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட தமிழர்களை பற்றி அறிந்த பின்னும் நாம் ஒன்று கூடாமல் இருக்கலாமா?


கூடுவோம் மே 20 தமிழர் கடலான மெரினாவில்.(கண்ணகி சிலை அருகில்)
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்.