தமிழீழ இலட்சியப்பற்றுடன் கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்

March 13, 2018

ஐ.நா முன்றலில்சீரற்றகாலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன் கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

தமிழினஅழிப்பிற்கானநீதியைசர்வதேசவிசாரணை மூலம் பெற்றுத்தாருங்கள் என்றஉரிமைமுழக்கத்தோடு, ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளிமுருகதாசன் திடலில் அணிதிரண்டஆயிரக்கணக்கானதமிழ்மக்கள் தங்கள் தேசத்தின் மீதானபற்றுருதியைமீண்டுமொருமுறைஅனைத்துலகத்தின் காதுகளுக்குஉரத்துக் கூறினார்கள். 

12.03.2018திங்கட்கிழமைஅன்றுசுவிஸ் நாட்டின் ஜெனிவாதொடரூந்துநிலையத்திற்குஅருகாமையில் உள்ளபூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்டஉரிமைக்குரலாகஒலிக்க,அவர்கள் தாங்கியபதாகைகள் மூலம்வேற்றினமக்களுக்குஎடுத்துரைத்து,நகர்ந்துஈகைப்பேரொளிமுருகதாசன் திடலைவந்தடைந்தது.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியஒன்றுகூடலானதுதமிழீழத் தேசியக்கொடிவானுயரஏற்றப்பட்டுஈழத்தமிழர்களின் விடியலுக்காகதீயினில் தம்மையே ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டுமலர்மாலை அணிவித்தலுடன்அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

புலம்பெயர் நாடுகளில் பிறந்து,வளர்ந்துவாழ்ந்தாலும் தமதுவேர்களைத் தேடிஅதன் இருப்புக்காகஉரத்துக் குரல்கொடுத்ததமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாகஅமைந்ததுடன் தமதுவாழிடமொழிகளில் புலமைத்துவத்துடனும்,ஆளுமையுடனும் ஆற்றியஉரைகள் மக்களின் மனதைநெகிழவைத்தது. இக் கவனயீர்ப்புப் பேரணியில் வேற்றினமொழியிலானஎழுச்சிஉரைகளுடன்,பேரணிக்கானபிரகடனமும் இடம்பெற்றிருந்தன.

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணைநடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கானசர்வசனவாக்கெடுப்புஐக்கியநாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இப் பேரணியில்பன்னிரண்டுநாட்களாகஈருருளிப்பயணத்தைமேற்கொண்டமனிதநேயசெயற்பாட்டாளர்கள் தாம் பயணித்தநாடுகளில் சந்தித்தஅரசியல் பிரமுகர்களிடம் வரலாறுதங்களுக்குவழங்கியகடமையின் நோக்கத்தைஎடுத்துரைத்ததோடு,பேரணியின் போது ஐ.நா மனிதவுரிமைஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் பேரணிதொடர்பாககோரிக்கைகள் அடங்கியமனுவும் கையளிக்கப்பட்டது. 

ஈழத்தமிழர்களின் இன்றையநிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.

தமிழீழம் என்றதேசம்தான் தங்கள் வாழ்வைவளமாக்கும் என்பதிலே உறுதிகொண்டிருந்தமக்கள், தேசத்தைமீட்டெடுக்கஎல்லாவிதஅர்ப்பணிப்புக்களையும்  செய்யத் தயாராக இருப்பதாகதமிழீழத் தேசியத் தலைவருக்கும்,மாவீரர்களுக்கும் உறுதிவழங்கிநம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்றபாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டுதமிழர்களின் தாரகமந்திரத்துடன்தணியாததாகத்துடன் கலைந்துசென்றனர்.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழு

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் May 24, 2018

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் 

புதன் May 23, 2018

யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச