தமிழீழ தேசியக் கொடியைப் பிடுங்கி எறிந்த BTF!

May 18, 2017

இலண்டனின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஹைட் (Hyde) பூங்காவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குப் போட்டியாகப் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் போட்டி நிகழ்வின் மேடை முன்பாகத் தமிழின உணர்வாளர் ஒருவரால் நாட்டப்பட்ட தமிழீழ தேசியக் கொடி, பிரித்தானிய தமிழர் பேரவையினரால் பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடிக்குப் பின்னால் தமிழர்கள் அணிதிரள்வதில்லை என்ற பிரம்மையைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் தமிழீழத் தேசியக் கொடியாகிய பாயும் புலிக்கொடியைத் தமது நிகழ்வுகளில் ஏற்ற மறுத்து வரும் பிரித்தானிய தமிழர் பேரவை, இன்று மாலை ஹைட் பூங்காவில் போட்டி முள்ளிவாய்க்கால் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் அங்கு சென்ற தமிழின உணர்வாளர் ஒருவர், துணிச்சலுடன் பிரித்தானிய தமிழர் பேரவையின் போட்டி முள்ளிவாய்க்கால் நிகழ்வு மேடை முன்பாக தமிழீழத் தேசியக் கொடியை நடுகை செய்திருந்தார்.

(தமிழீழத் தேசியக் கொடியைத் துணிச்சலுடன் நடுகை செய்யும் மானத்தமிழன்)

இதனையடுத்து அங்கு பாதுகாப்பாளர்களின் மேலங்கியையும், தலையை மூடும் முக்காட்டையும் அணிந்தவாறு புகுந்த பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த குண்டர்கள், தமிழீழ தேசியக் கொடியைப் பிடுங்கி எறிந்து அதனை அவமதித்துள்ளார்.

இதன்பொழுது பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த குண்டர் ஒருவரால் தமிழீழ தேசியக் கொடி பிடுங்கப்படும் காட்சி அங்கு நின்ற தமிழின உணர்வாளர்கள் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தமிழீழ தேசியக் கொடியைப் பிடுங்கும் BTF குண்டர்)

பிரித்தானிய தமிழர் பேரவையின் இவ் அடாவடித்தனம் பிரித்தானியாவாழ் தமிழீழ மக்களைப் பெரும் கொந்தளிப்பிற்கு ஆளாக்கியிருக்கின்றது.

 

செய்திகள்
திங்கள் January 22, 2018

சுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற தமிழர் இயக்கத்தின் தமிழ்மக்களுக்கான கலந்துரையாடல் 20.01.2018 சனிக்கிழமை ,நேற்று சுவிஸ் நாட்டின் சுக் மாநிலத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பி

திங்கள் January 22, 2018

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின். வீரவணக்க நிகழ்வு 21.01.2018 இன்று மாலை 4.00 மணிக்கு ஸ்ராஸ்பூர் பிரான்சில்...

திங்கள் January 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 இன் முதற் போட்டியாக கடந்த 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை உள்ளரங்கச் சுற்றுப் போட