தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2018 - மெல்பேர்ண்

சனி ஏப்ரல் 14, 2018

பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 30-வதுஆண்டு நினைவுநாள் நிகழ்வுகளோடு, தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப் பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக தமிழர்கள் ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். அவ்வகையில் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில்  மெல்பேணிலும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளும் மிகவும் உணர்வுபூர்வமாக எதிர்வரும் சனிக்கிழமை 21-04-2018 அன்று நினைவுகூரப்படுகின்றது.

இந்திய அரசிடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுநாள் இவ்வாண்டு அன்னை பூபதி அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவாண்டாக அமைகின்றது. விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாக விளங்கிய எங்கள் மக்களில் உயர்ந்தபட்ச தியாகங்களைப் புரிந்து பணியாற்றிய மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் அனைவரையும் இந்நாளில் தமிழர்கள் ஒருங்கே நினைவுகூர்கிறார்கள். குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.

அவுஸ்திரேலியாவில் தமிழ்த் தேசிய விடுதலைப்பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்து உயிர்நீத்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் அதிஉயர்விருதான மாமனிதர் விருது வழங்கிக்கெளரவிக்கப்பட்ட மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்களையும் இந்நாளில் நாம் நினைவுகூருவது இந்நினைவுநாளின் சிறப்பம்சமாகும்.

இடம்: St Jude Parish Hall, 49 George St, Scoresby, Vic 3179

காலம்: 21-4-2018 சனிக்கிழமை மாலை 6 மணி - 8.00மணி வரை 

எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பதுநாட்கள் தியாகவேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் வணக்க நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0404 802 104.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - விக்ரோறியா, அவுஸ்திரேலியா.