தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அகவை 40 எழுச்சி

சனி மே 07, 2016

சுவிசில் எழுச்சியாகவும், உணர்வாகவும் நடைபெற்றதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அகவை40 எழுச்சி நிகழ்வு!!!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்ட்டு சிறந்த கட்டுக்கோப்புடன் நெறிப்படுத்தப்பட்டு,தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கமாகவும்இ தமிழரது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் உயிர் மூச்சாகவும் உந்து சக்தியாகவும்இ தமிழரது அரசியல் சக்தியாகவும் போரியல் சக்தியாகவும்  ஒரு உறுதியான கட்டுப்பாடு மிக்க தெளிவான நீதியான அரசியல் இலட்சியமும்,பரந்துபட்ட உலக தமிழ் மக்களின்நம்பிக்கைக்கும் ஆதரவிற்குரியதும்,பலம் மிக்க பெரும் மக்கள் விடுதலை இயக்கமாய் வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த்தேசிய அரசியலின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நாற்பதாவது அகவையானதுஇதமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் ஒருங்கிணைப்பில் 05.05.2016 வியாழக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் எழுச்சியாகவும், உணர்வாகவும் அரங்கம் நிறைந்த உணர்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.


அறப்போரிலும் சரி ஆயதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர்உலக சிகரத்தை  எட்டியிருக்கின்றது என்ற தமிழீழத் தேசியத் தலைவர்அவர்களின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், அகவை 40 எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலரஞ்சலியுடன் ஆரம்பமானது. 

நிகழ்வில் போராளிகளின் சிறப்புரைகளுடன்,எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் உணர்வு மிக்க எழுச்சி நடனம், கவிதைகளோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும் சார்ந்த விபரணத்தொகுப்பும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. 

நிகழ்வின் இறுதியாக உறுதிமொழியுடன், நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்வரை! கொண்ட கொள்கையில் உறுதி தளராது இறுதிவரை போராடி, போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் போராட்டச்சக்தி தோற்றம் பெற்று 40வது ஆண்டில் நிற்கும் நாம்இ ஓரணியில் நிற்க வேண்டியதன் அவசியத்தினை அனைவரும்உணர்ந்துஇ எம்; மீது நடாத்தப்பட்ட 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு மே18- முள்ளிவாய்க்கால்  7வது ஆண்டு வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து எம் மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி உணர்வுடனும்,உறுதியுடனும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க 18.05.2016 புதன்கிழமை பேர்ண் பாராளுமன்றம் முன்பாக அணிதிரளுமாறு இத்தருணத்தில் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளை