தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு!

வியாழன் ஜூன் 14, 2018

14.  06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.

விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியது .கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

குலமண்ணை, அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில்  இடம்பெற்ற நடைமுறை மீறலுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.

யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய மூவரையும் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்தும் விடுவித்து இழப்பீடும் வழங்கியது.