தமிழீழ விடுதலையும் சர்வதேச நாடுகளின் தடையும் - கருத்தரங்கம்

செவ்வாய் அக்டோபர் 20, 2015

தமிழீழ விடுதலையும் சர்வதேச நாடுகளின் தடையும்’ என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை 17.10.15அன்று சூலூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடந்தது.


அதில் சமீபத்தில் தமிழர்தரப்பு நியாயங்களை ஐநா அவையில் நேரடியாக பதிவு செய்துவிட்டு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஐநாவில் என்ன நடந்ததென்றும் மற்றும் எவ்வாறெல்லாம் சர்வதேச நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும் இந்தியாவும் ஈழத்திற்கெதிராக வேலை செய்கிறது என்பதை விளக்கி பேசினார். பின்அடுத்து எந்த வகையான போராட்டத்தை முன்னெடுப்பது என்ற வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர்.கு.இராமகிருட்டிணன் அவர்களும் மதிமுகவின் இளைஞரணி செயலாளர் தோழர். ஈஸ்வரன் அவர்களும் உரைநிகழ்த்தினார்கள்.


இந்நிகழவில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினை சேர்ந்தவர்களும் திரளான தமிழின உணர்வாளர்களும் கலந்துகொண்டார்கள்.இந்த கருத்தரங்கத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்தது.