தமிழீழ விடுதலையை அழிக்க துடிக்கும் அமெரிக்க தூதரகம் முற்றுகை.

புதன் செப்டம்பர் 30, 2015

இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்த,நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்று பாதிக்கப்பட்ட தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, அதை மறுத்து கொலை செய்த கொலைகாரனான இலங்கை இனவெறி அரசே தான் செய்த கொலையை விசாரிக்கும் உள்நாட்டு விசாரணை என்ற அயோக்கியத்தனத்தை இலங்கை, மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் தீர்மானமாககொண்டுவந்திருக்கிறது.

 

மேலும் இலங்கைக்கு சர்வதேச நிதிகளை பெற்றுத் தரும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தைக் கண்டித்து சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகள், இயக்கங்களும் இணைந்து 28-செப்-2015 அன்று நடத்தப்பட்டது. அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. சிரிசேனா, ரணில், ராஜபக்சே ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
கோரிக்கைகள்:

 


1948 முதல் தற்போது வரை தமிழீழத்தில் நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலையே
• இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னிறுத்தும் அமெரிக்க தீர்மானத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இனப்படுகொலைக்கான சர்வதேச விசாராணையே தேவை.


• தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே தீர்வு.


• விடுதலைப் புலிகள் மீதான தடையை அனைத்து நாடுகளும் நீக்க வேண்டும்.


• விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் விசாரிப்பதென்பது, மீண்டும் தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கான நடவடிக்கை.


கலந்துகொண்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள்: 


1. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 
2. விடுதலை சிறுத்தைகள் கட்சி 
3. தமிழக வாழ்வுரிமை கட்சி
4. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் 
5. சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)
6. தமிழர் தேசிய முன்ணணி
7. தந்தை பெரியார் திராவிடர் கழகம்
8. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
9. தமிழ்தேசிய பேரியக்கம்
10. தமிழ்புலிகள் இயக்கம் 
11. திராவிடர் விடுதலைக் கழகம்
12. புரட்சிகர இளைஞர் முன்னணி 
13. தற்சார்பு விவசாயிகள் இயக்கம்
14. தமிழர் விடுதலை கழகம் 
15. தமிழர் விடியல் கட்சி 
16. அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
17. விடுதலை தமிழ்புலிகள் கட்சி
18. காஞ்சி மக்கள் மன்றம்
19. தமிழ்தேசக் குடியரசு இயக்கம்
20. வழக்கறிஞர் கயல் (எ) அங்கயற்கண்ணி
21. .மக்கள் விடுதலை இயக்கம் 
22. பூவுலகின் நண்பர்கள்
23. தமிழர் நலன் இயக்கம் 
24. மக்கள் நலன் இயக்கம்
25. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 
26. மறுமலர்ச்சி நாம் தமிழர் கட்சி 
27. இளைய தலைமுறை கட்சி
28. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு 
29. தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு 
30. மாற்றம்- இளையோர் மாணவர் இயக்கம் 
31. பாலசந்திரன் மாணவர் இயக்கம் 
32. மே 17 இயக்கம்