தமிழ்க் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகள் அல்ல, அனைத்துக் கட்சிகளுடனும் பேசவேண்டும்

January 12, 2017

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. மாறாக, அனைத்து தமிழ்த் தரப்புக்களுடனும் பேசவேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் எனவும் அவர்களுடன் மட்டும் அரசாங்கம் தொடர்பு பேணக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்
.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு இது ஆகாது எனவும் சரியான அரசியல் தீர்வினை எட்ட வேண்டுமாயின் அரசாங்கம் அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வினை எட்ட முயற்சிக்க வேண்டும் எனவும் வீ.ஆனந்தசங்கரி கூறியிருக்கின்றார். 

செய்திகள்
வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள