தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலத்தில் மில்லரின் தாய் சுடர் ஏற்றினார்.

May 01, 2017

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் தொழிலாளர் தினநிகழ்வு இன்றைய’ தினம்சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர்சிவன் கோவில் முன்றலில்இடம்பெற்றுள்ளது. இதன் ஆரம்பநிகழ்வாக  மோட்டர் சைக்கிள்ஊர்திப் பேரணியானது கைதடிச்சந்தியிலிருந்து பி.ப 2.00 மணிக்குஆரம்பமாகி ஏ9 வீதி வழியாகசாகச்சேரி பேருந்து தரிப்பிடத்தைசென்றடைந்தது.

அங்கு கூடிய பொது மக்களுடன்இணைந்து பொதுவான எழுச்சிப்பேரணியானது பி.ப3.00 மணிக்குசாவகச்சேரி பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்டுசாவகச்சேரி புகையிரதநிலையத்திற்கு அண்மையில் உள்ளவாரிவனநாதர்  சிவன்கோவிலைநோக்கிச் சென்றடைந்தது. சிவன்கோவில் முன்றலை பேரணிஅடைந்ததும் பி.ப 3.30 மணிக்குபொதுக்கூட்டம் ஆரம்பமாகி அங்குமேதின உரைகள் நடைபெற்றன.

இணைப்பு: 
செய்திகள்