தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க ஆலோசனை!

யூலை 17, 2017

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒரு தொகுதியினர் வெளியேறப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்கள் வெளியேறினால், எதிர்க்கட்சியை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை) இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ரணில் தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியும் ஆராய்ந்து வருவதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சில் ஈடுபட்டு வருவதுடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனும் பேசி ஏதோ ஒரு பக்கத்திற்கு இழுத்துக்கொள்ள முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள்