தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை இரட்டை வேடம்

வெள்ளி டிசம்பர் 04, 2015

தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை, நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை கடுமையான விமர்சனங்களிற்கு வழிகோலியுள்ளது.

நிதியொதுக்கீட்டு சட்டமூலமொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை இதுவே முதல் தடவையாகும். இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு நடத்தப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 பேரும் எதிராக 52 பேரும் வாக்களித்தனர். இதன்படி, இந்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றுப்பட்டுள்ளது.

காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மையினர்த்தவர்கள் சகலரும் ஆதரவளித்தனர்.

த.தே.கூவில் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் ஆகிய இருவரும் சமூகமளிக்கவில்லை.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினர் அரசிற்கான ஆதரவை மீளப்பெற்றுக்கொள்ளப்போவதாக மிரடடிக்கொண்டு வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்தமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.