தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் கைது: தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கண்டனம்

செவ்வாய் அக்டோபர் 09, 2018

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையிட்டுத் தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பிரித்தானிய உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் தமிழர்களுக்கான பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, திரு யோகலிங்கம் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

இது இவ்விதம் இருக்க திரு யோகலிங்கம் அவர்களின் வாகனத்தை இன்று இரவு பிரித்தானிய காவல்துறையினர் பலவந்தமாக அகற்றிச் சென்ற காட்சி அருகில் நின்ற செயற்பாட்டாளர்களால் படம் பிடிக்கப்பட்டு சங்கதி-24 இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.