தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் யோகலிங்கம் பிணையில் விடுதலை!

செவ்வாய் அக்டோபர் 09, 2018

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சொக்கலிங்கம் யோகலிங்கம் 24 மணிநேரத் தடுப்புக் காவலின் பின் காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் நேற்று கைது செய்யப்பட்ட ஏனைய தமிழ் செயற்பாட்டாளர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய விசாரணைகள் தொடர்வதாகக் கூறியே இவர்கள் அனைவரையும் பிரித்தானிய காவல்துறையினர் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

அதேவேளை திரு யோகலிங்கம் அவர்களின் வாகனமும், அவரது வீட்டில் இருந்து காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களும் தற்பொழுது காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.