தமிழ்மொழி தேர்வு மேற்பார்வையாளர் நடத்துநருக்கான செயலமர்வு!

May 02, 2017

கல்விமேம்பாட்டுப்பேரவை வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி பொதுத் தேர்வு மற்றும் புலன் மொழி வளத்தேர்வு - 2017 இல் கலந்துகொள்ளும் மேர்பார்வையாளர்கள், தேர்வு நடத்துநர் ஆகியோருக்கான செயலமர்வு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (30.04.2017) ஞாயிற்றுக்கிழமை  பிரான்சில் Ivry sur seine பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் காலை 9.30 மணியளவில் செயலமர்வு ஆரம்பமாகியது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். 

 ஒருநாள் செயலமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட தமிழ்ச்சோலை ஆசிரிய ஆசிரியைகள் கலந்துகொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொண்டனர். 

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் திரு.அகிலன், திரு.மகிந்தன் ஆகியோர் தேர்வுதொடர்பான அறிவுறுத்தல்களை சிறப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தேர்வுகளில் பங்குபற்றுவோருக்கான அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.  செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு சிறப்பாக நிறைவடைந்தது. பிரான்சில் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் புற மாவட்டங்களிலுமாக மொத்தம் 5 ஆயிரத்து 938 மாணவர்கள்  இம்முறை தேர்வுக்குத் தோற்றவுள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர். 

புலன்மொழி வளத்தேர்வு பிரான்சில் 06.05.2017 சனிக்கிழமை, 13.05.2017 சனிக்கிழமை, 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு (எழுத்துத் தேர்வு) 03.06.2017 சனிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

வியாழன் January 04, 2018

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே  ரூபவாகினி செயற்பட்டது