தமிழ் அரசியற் கைதிகளின் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்

சனி நவம்பர் 14, 2015

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகள் தமிழர் தம் அரசியற் தலைமையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 'நல்லாட்சி' அரசினால் தமது விடுதலைக்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலும்இ அது தொடர்பாக தாமே தமது விடுதலைக்கான கோரிக்கையை முன்வைத்து சாகும் வரை உண்ணனாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
அரசியற் கைதிகளின் இப்போராட்டமானது ஆரம்பமானதிலிருந்து இன்று வரை பல தரப்பினராலும் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும்இ அவை எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரசியற் கைதிகள் தமது போராட்டத்திற்கான ஆதரவை சகல அரசியற் கட்சிகள்இ சமூக அமைப்புக்கள் மற்றும் புலம் பெயர் சமூகத்தினரிடமும் கோரியுள்ளனர்.
 
தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால் நடைபெறும் இந்நிலையில்இ அரசியற் கைதிகளின் போராட்டத்தை வலுப்படுத்த புலம் பெயர் தளத்தில் இருக்கக் கூடிய அனைத்து சமூக அமைப்புக்களையும் மற்றும் சர்வ மதத் தலங்களையும் இணைந்து செயலாற்றுமாறு கோருகின்றோம்.
 
நவம்பர் 13ஆம் திகதி தாயகத்திலும் மற்றும் சர்வதேச நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக சர்வ மதப் பிரார்த்தனைகளிலும் நடைபெறும் போராட்டங்களிலும் இணைந்து கொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கின்றது.

அறிக்கையின் முழுவடிவம் கீழே