தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளில் கூகுள்!

Thursday September 14, 2017

கூகுள் டிரான்ஸ்லேட் ஆஃப்லைன் பதிப்பில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளை பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு ஆஃப்லைனிலும் ஏழு மொழிகளை வாடிக்கையாளர்கள் டிரான்ஸ்லேட் செய்ய முடியம்.

கூகுளின் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் தமிழ், தெலுங்கு, கன்னடா, உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளை டிரான்ஸ்லேட் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. இந்த அம்சம் மூலம் விஷுவல் டிரான்ஸ்லேஷனை வாடிக்கையாளர்கள் விரும்பும் மொழியில் ஆஃப்லன் முறையில் மேற்கொள்ள முடியும். 

புதிய அப்டேட் மூலம் தமிழ் மற்றும் வங்காள மொழிகளுக்கு கான்வெர்சேஷன் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மோட் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் செயலியுடன் பேசி மொழி மாற்றத்தை தெரிந்து கொள்ள முடியும். புதிய கான்வெர்சேஷன் மோடினை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கல் மைக் பட்டனை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

கூகுள் டிரான்ஸ்லேட் செயலி தானாக வாடிக்கையாளர்கள் பேசும் மொழியை அறிந்து கொண்டு சீரான உரையாடல் அனுபவத்தை வழங்கும். புதிய வசதியை பெற வாடிக்கையாளர்கள் மொழிகளை முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும். ஆஃப்லைன் வசதியை கொண்டு குறிப்பிட்ட வார்த்தை அல்லது வாக்கியத்தை இண்டர்நெட் உதவியின்றி மொழிமாற்றம் செய்ய முடியும்.  

சமீபத்தில் கூகுள் வாய்ஸ் இன்புட் சேவை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, மராட்டியம், வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளுக்கு வழங்கப்பட்டது. கூகுளின் டிரான்ஸ்லேட் செயலி, வாடிக்கையாளர்களை ஆங்கில மொழி மீது கேமரா காண்பிக்க செய்து தங்களுக்கு தேவையான மொழியில் அதனை மாற்றும் திறன் கொண்டுள்ளது. 

அனைத்து வசதிகளும் தற்சமயம் இந்தி மொழிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற மொழிகளும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் சேர்க்கப்பட்டு வருகிறது.