தமிழ் எழுத்து கற்றல்!

Tuesday October 17, 2017

உயிரெழுத்து பன்னிரண்டு அதை – உன்
உடலோடு ஒற்றிடு!

மெய்யெழுத்து பதினெட்டு அதை –உன்
உயிரோடு கலந்திடு!

உயிரும் மெய்யும் கலந்த –உன்
உயிர் தமிழைக் கற்றிடு!

உயிர் தமிழைக் காக்க போர்
ஆயுதம் தன்னை ஏந்திடு!

“கசடதபற” வல்லினம் என்று –உன்
கல்வியை வலிமையாய் கற்றிடு!

“ஙஞணநமன”  மெல்லினம் என்று –உன்
செவியில் மென்மையாய் சேர்த்திடு!

“யரலவழள” இடையினம் என்று –உன்
நாவால் இனிதாய் ஒலித்திடு!

செந்தமிழ் சொல்லெடுத்து நல்ல நல்ல
செந்தமிழ்ப் பண்பாடு!