தமிழ் சினிமா முக்கிய திருப்பத்திற்கு தயாராகிறது!

Saturday October 20, 2018

தமிழ் சினிமா ஒரு முக்கிய திருப்பத்திற்கு தயாராகிறது என்று இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 

தமிழ் திரையுலகில் பரியேறும் பெருமாள் ராட்சசன் வடசென்னை  என தொடர்ச்சியாக சில நல்ல படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் விமர்சகர்களும், விநியோகஸ்தர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
 
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ;வடசென்னை  முழுக்க வடசென்னையை மையப்படுத்தியே இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். 

தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அக்டோபர் 17-ம். திகதி வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் தொடர்பாக முன்னணி இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது

 வடசென்னை  திரைப்படத்திற்கு மக்கள் தரும் ஆதரவும் விமர்சனங்களும் ஆரோக்கியமாக உள்ளது.. தமிழ்சினிமா ஒரு முக்கிய திருப்பத்திற்கு தயாராகிறது என்பது மட்டும் புரிகிறது. இனி தொடர்ந்து நல்ல படங்கள் வரும் என நம்பிக்கை வருகிறது. 96, ராட்சசன்,பரியேறும் பெருமாள், வடசென்னை... தொடரும். 
 
இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார்.