தமிழ் மக்களின் ஆதரவை வேண்டுகிறார் கரலைன் மல்ரூனி!

Friday February 16, 2018

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின்முதற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதில் நான்கு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் மூவரேமுதன்மையானவர்களாக பார்க்கப்படுகின்றனர். கரலைன் மல்ரூனி கிரிஸ்ரீன் எலியட் மற்றும் டக் போட் ஆகியோருக்கு இடையிலேயே போட்டிநிலவுகிறது. யூன் முதற்பகுதியில் நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநில பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ளதலைமைத் தேர்தலில் உள்ள ஒரே வேட்பாளரும் இளையவரும் முன்னாள் கனடிய பிரதமரும் தமிழ் மக்களுக்கு மிக நெருங்கிய பிரைன்மல்ரூனியின் புதல்வியுமான கரலைன் மல்ரூனி தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தேர்தலுக்கு வாரங்களே உள்ள நிலையில் பழமைவாத கட்சி உறுப்பினர்களுக்கு முன் முக்கிய தெரிவு உள்ளது. வரும் யூன் தேர்தலில்கதலீன் வேயினை வெற்றிகொள்ளக்கூடிய ஆற்றல் உள்ள அந்தத் தலைவர் யார்?

தமது கடுமையான உழைப்பின் மூலம் பங்களிப்புச் செய்துவரும் இளையவர்களாக இருந்தாலும் தாய்மார்களாக இருந்தாலும் புதியகுடிவரவாளர்களாக இருந்தாலும் ஏனைய அனைவர்களாக இருந்தாலும் அவர்கள் மனங்களை வென்று கட்சியை வெற்றி இலக்கை நோக்கிஅழைத்துச் செல்லும் தனித்துவமான நிலையில் கரலைன் உள்ளார்.

கரலைன் வியாபாரம் மற்றும் சட்டத்துறையில் தேர்ந்த துறைசார் வல்லுனர் மட்டுமன்றி கணவர் அன்ரூவுடன் நான்கு பிள்ளைகள் உள்ளனர். . பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பை எதிர்கொள்ளும் பெண்கள், சிறுமிகளுக்கு உதவியாக ஒரு தர்மஸ்பாபனத்தையும் நடாத்தி வருகிறார்.

1986இல் கனடிய கரையை வந்தடைந்த தமிழ் அகதிகளுக்கு கை கொடுத்த அன்றைய முற்போக்கு பழமைவாத கட்சியைச் சார்ந்த பிரதமர்பிரையன் மல்ரூனியின் மகளும் ஆவார். கரலைன் கட்சியல் மட்டுமல்ல ஒன்ராரியோவின் முன்னேற்றகரமாக மாற்றங்களைபிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறார். தலைமைத்துவ தேர்தலில் உள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரே யோக் சிம்கோ வேட்பாளார்மட்டுமன்றி கட்சியின் வளர்ச்சி கருதி அதற்கான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு கட்சிக்கு வலுச்சேர்த்துள்ளார்.

முன்னேற்றகரமாக மாற்றத்தை ஒன்ராரியோ மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அவர்களின் அதிகரித்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டிய பொறுப்பும் அதற்கான தலைவரை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு என்பது வலியுறுத்தப்பட்டுஅதற்கான பொறுப்பை ஏற்று அதனை திறப்பட செய்ய கரலைன் காத்திருப்பதாகவும் அவரை தலைவராக தெரிவு செய்வதன் மூலம்முன்னேற்றகரமான மாற்றங்களை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் 9 வரை நடைபெறவுள்ள வாக்களிப்பில் கட்சியின் உறுப்பினர்கள் புதிய தலைவருக்கான வாக்களிப்பில் கலந்து கொள்வர். அதற்கானமுடிவுகள் மார்ச் 10ஆம் நாள் வெளியாகும்.